வெங்கடேஷின் எஃப்3 படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐதராபாத் : வெங்டேஷ், வருண் தேஜ், தமன்னா மற்றும் மெஹ்ரீன் பிர்சாடா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்3.

எஃப்2 படத்தின் அடுத்த பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் வெங்கடேஷ்

நடிகர் வெங்கடேஷ்

நடிகர் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன் மற்றும் மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் எஃப்3. இந்தப் படம் எஃப்2 படத்தின் அடுத்த பாகமாக உருவாகியுள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் முந்தைய பாகத்தை போலவே காமெடி கலாட்டாவாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

எஃப்2 படம்

எஃப்2 படம்

எஃப்2 படத்தில் மனைவி மற்றும் காதலியால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் படும் பாடுகளையும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் மையமாக கொண்டு வெளியாகி காமெடி மற்றும் திரைக்கதையால் சிறப்பான வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக்குவித்தது இந்தப் படம்.

எஃப்3 படம்

எஃப்3 படம்

இந்நிலையில் அதே கேரக்டர்களை வைத்து தற்போது எஃப்3 என்ற அடுத்த பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சோனல் சவுஹான் புதிய இணைப்பாக இணைந்துள்ளார். சமீபத்தில் இதை அவர் சமூகவலைதளம் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. மேலும் டைரக்டரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25, 2022ல் ரிலீஸ்

பிப்ரவரி 25, 2022ல் ரிலீஸ்

அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சுனில், முரளி சர்மா மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

சிறப்பான வெங்கடேஷ்

சிறப்பான வெங்கடேஷ்

நடிகர் வெங்கடேஷ் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். டோலிவுட்டின் முக்கியமான ஹீரோவாக பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் பல சிறப்பான படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்தப் படம் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X