யாருக்கும் தெரியாத அந்த 'பிக் பாஸ்' ரகசியம் ஸ்ரீரெட்டிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடத்த அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. அனுஷ்கா தவிர்த்து நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவியின் பெயர்களும் அடிபடுகிறது.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி இது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
வெங்கடேஷ்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடிகர் வெங்கடேஷ் நடத்தப் போவதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதை பார்த்த வெங்கடேஷ் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டிக்கு பல இடங்களில் பலரையும் தெரியும். வெங்கடேஷ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
புகைப்படம்
பிக் பாஸ் பற்றி பேசிய ஸ்ரீரெட்டி ராணாவின் தம்பி அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது எங்கே என்று நினைவிருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணா தம்பி
பட வாய்ப்பு தருவதாகக் கூறி அபிராம் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











