வாத்தி 8 வாரம் தியேட்டரில் ஓடும்.. தெலுங்கிலும் ஹிட் அடிக்கும்.. இயக்குநர் வெங்கி அட்லூரி உறுதி!

சென்னை: பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ள தனுஷின் வாத்தி திரைப்படம் முதல் வாரம் மட்டும் ஓடும் படம் கிடையாது என்றும் குறைந்தது 8 வாரமாவது தியேட்டர்களில் ஓடும் என இயக்குநர் வெங்கி அட்லூரி பேசிய பேச்சு தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், விஜய்யின் வாரிசு படங்களை தெலுங்கு இயக்குநர்கள் இயக்கி இருந்த நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் நாளை வெளியாகிறது.

வாத்தி படத்தை சென்சார் செய்யும் போது பார்த்தவர்கள் படம் வேறலெவலில் உள்ளதாக முதல் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாறுமாறு ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம்

தாறுமாறு ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. நித்யா மேனன் சோபனாவாக நடித்த நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா என அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தனர்.

கதிர் கதாபாத்திரம்

கதிர் கதாபாத்திரம்

திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் கதிர் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து மிரட்டியதை பலரும் பாராட்டி இருந்தனர். அந்த படத்தின் இடை வேளை காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கூஸ்பம்ப்ஸை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பைலிங்குவல் படம்

பைலிங்குவல் படம்

தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் Sir என்கிற டைட்டிலிலும் இந்த படம் உருவாகி உள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், விஜய்யின் வாரிசு படங்கள் வரிசையில் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் நடித்த பைலிங்குவல் படமாக வாத்தி நாளை வெளியாகிறது.

பாசிட்டிவ் விமர்சனம்

பாசிட்டிவ் விமர்சனம்

பிரின்ஸ், வாரிசு டீசர்கள் வெளியான நிலையில், ட்ரோல்கள் பறந்தன. ஆனால், சமீபத்தில் வெளியான வாத்தி ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவரும் வண்ணம் பாராட்டுக்களை பெற்றது. மேலும், படத்தை பார்த்த சில பிரபலங்களும் எமோஷனல் கனெக்ட், ஃபேமிலி ரசிகர்களுக்கான கன்டென்ட், இளைஞர்களை கவரும் விஷயங்கள் என பக்கா பேக்கேஜாக வாத்தி படம் உள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இயக்குநர் நம்பிக்கை

இயக்குநர் நம்பிக்கை

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், பேசிய நடிகர் தனுஷ் ரொம்பவே நம்பிக்கையுடன் பேசி இருந்தார். இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் வாத்தி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கி அட்லூரி பெரும் நம்பிக்கையுடன் பேசிய பேச்சுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

டோலிவுட்டில் 4 வாரங்கள்

டோலிவுட்டில் 4 வாரங்கள்


வாத்தி திரைப்படத்தை ரசிகர்கள் நம்பி தியேட்டருக்கு போய் பார்க்கலாம். இது வெறும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகி 18, 19 தேதிகளுடன் ஓட்டம் நிற்கும் படம் கிடையாது.
குறைந்த பட்சம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 4 வாரங்கள் இந்த படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் என வெங்கி அட்லூரி வெளிப்படையாக பேசியது தனுஷ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 8 வாரம் ஓடும்

மேலும், தமிழ்நாட்டில் குறைந்தது 8 வாரங்களாவது வாத்தி படம் வெற்றிநடை போடும் என பெரும் நம்பிக்கையுடன் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி பேசிய வீடியோ காட்சிகளை தனுஷ் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். படிப்பின் அவசியத்தையும் கல்வியை வியாபாரமாக பார்க்கக் கூடாது என்கிற கருத்தையும் இந்த படம் கூறவிருக்கிறது.

பிரின்ஸ், வாரிசு படங்களை கலாய்த்து

பிரின்ஸ், வாரிசு படங்களை கலாய்த்து

தெலுங்கு இயக்குநர்கள் இயக்கிய தமிழ் படங்கள் சமீப காலமாக சொதப்பிய நிலையில், என் படம் அப்படி இருக்காது என வெங்கி அட்லூரி பேசிய பேச்சை ஷேர் செய்து வரும் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் விஜய்யின் வாரிசு படங்களை தான் வெங்கி அட்லூரி கலாய்த்துள்ளார் என கமெண்ட் போட்டு கெத்துக் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X