எட்டு வருடங்களுக்கு பிறகு எழுச்சிபெறும் கபடி டீம்: வெண்ணிலா கபடிக் குழு 2

Recommended Video

8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் - வெண்ணிலா கபடிக் குழு 2- வீடியோ

சென்னை: வெண்ணிலா கபடிக் குழு 2 திரைப்படத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம்.

சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடிக் குழு. இப்படத்தில் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Vennila Kabadi Kuzhu 2 movie update

எட்டு வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. சுசீந்திரனின் உறவினர் செல்வசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். விக்ராந்துக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த அர்த்தனா பினு நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் இறந்துவிடுவார். அதன்பிறகு கபடி டீமிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் விக்ராந்த், டீமை எப்படி வழி நடத்துகிறார் என்பது முக்கிய அம்சமாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் பசுபதி விக்ராந்துக்கு அப்பாவாக நடித்துள்ளார். அதனால் அப்பா மகன் உறவை பறைசாற்றக்கூடிய காட்சிகளும் இடம்பெறுமாம். முதல் பாகத்தில் கபடி கோச்சாக நடித்த கிஷோர் இப்படத்திலும் கோச்சாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வசேகரன் அடிப்படையில் ஒரு கபடி வீரர். அதனால் அவர் விளையாடும்போது நடைபெற்ற சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், செல்வசேகரன் இயக்கும் முதல் படம் வெண்ணிலா கபடிக் குழு 2 என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். செல்வசேகரன் இசையில் திருவிழா பாடல் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X