Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இனி வாழ்வதற்காவது ஏதாவது செய்யுங்க..நடிகர் சங்கத்திடம் வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி வேண்டுகோள்!
சென்னை : இனி வாழ்வதற்காவது ஏதாவது செய்யுங்கள் என்று வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் ஹரி வைரவன் நேற்று உயிரிழந்தார்.
உடல்நிலைக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஹரி வைரவன் உயிரிழந்ததற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
வாழ்க்கையே மாறும்னு நினைச்சோம்..ஆனா..வெண்ணிலா கபடிகுழு ஹரி வைரவனை நினைத்து கலங்கும் அப்புக்குட்டி!

வெண்ணிலா கபடிகுழு
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இப்படத்தில், விஷ்ணு விஷால், அப்புகுட்டி, பரோட்டா முரளி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் தான் நடிகர் ஹரி வைரவன்.

விதி விளையாடியது
வெண்ணிலா கபடிகுழு படத்தின் வெற்றிக்கு பிறகு குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்பு கிடைக்காமல், ஒவ்வொரு கம்பேனியாக அலைந்து திரிந்து ஒரு வழியாக படவாய்ப்பு கிடைத்து இனி எல்லாம் சுகமே என நினைத்த ஹரி வைரவன் வாழ்க்கையில் விதி விளையாடியது.

உயிரிழந்தார்
நடிகர் ஹரி வைரவனின் உடல்நிலை திடீரென்று ஒருநாள் மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து மீண்டார். கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு கிட்னியும் செயலிழந்து முகம், கை, கால் வீங்கி நிலையில் நடக்கவே முடியாமல் மோசமான நிலையில் இருந்த ஹரி வைரவன் நேற்று அதிகாலை 12:15 மணியளவில் உயிரிழந்தார்.

திரைப்பிரபலங்கள் இரங்கல்
ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரி வைரவன் மறைவுக்கு வெண்ணிலா கபடிகுழு இயக்குநர்,நடிகர் விஷ்ணு விஷால்,சூரி, அப்புக்குடி போன்ற சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். நேற்று அவரது சொந்த ஊரான மதுரையில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

ஏதாவது உதவி செய்யுங்கள்
இந்நிலையில், ஹரி வைரவனின் சிகிச்சைக்காக கடந்த சில ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணம்,நகை என அனைத்தையும் விற்றுவிட்டேன். எப்படியாவது கணவனை காப்பாற்றிவிட வேண்டும் எனபோராடிய அவரது மனைவி இன்று தனது குழந்தையுடன் நிற்கதியாக இருக்கிறார். தனக்கு என்று சொந்தமாக இருந்த வீட்டையும் விற்றுவிட்டு இன்று வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் தனக்கும், தனது குழந்தைக்கு வாழ்வதற்காவது ஏதாவது உதவி செய்யுங்க என நடிகர் ஹரி வைரவனின் மனைவி நடிகர் சங்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.