twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்… திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!

    |

    சென்னை: சுசிந்திரன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ஹரி வைரவன்.

    வெண்ணிலா கபடி குழு படத்தைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு போன்றவைகளால் அவதிப்பட்டு வந்தார் ஹரி வைரவன்.

    Selfish-ஆ இருக்கார்… Political Game ஆடுறார்… டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் பூமர் விக்ரமன்…Selfish-ஆ இருக்கார்… Political Game ஆடுறார்… டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் பூமர் விக்ரமன்…

    காமெடி நடிகராக ஹரி வைரவன்

    காமெடி நடிகராக ஹரி வைரவன்

    விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. கபடியை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, அப்புகுட்டி ஆகியோருடன் ஹரி வைரவனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து 'குள்ளநரி கூட்டம்', கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' போன்ற படங்களிலும் ஹைரி வைரவன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

    இளம் வயதில் மரணம்

    இளம் வயதில் மரணம்

    இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஹரி வைரவன், நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்தார். இதுகுறித்து நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் ஹரி வைரவன் 3.12.22 காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரி வைரவனின் கோரிக்கை

    ஹரி வைரவனின் கோரிக்கை

    முன்னதாக, உடல் முழுவதும் பல வியாதிகளால் அவதிப்பட்டு வந்த ஹரி வைரவன் நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுவதாக, அவரது மனைவி தெரிவித்து இருந்தார். ஹரி வைரவன் சிகிச்சையில் இருந்த போது, அவர் 6 மாதம் தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. அதேநேரம், அவர் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாது என நினைத்து, கருணை கொலை செய்துவிடுங்கள் என தன்னிடம் கெஞ்சியதாகவும் அவரது மனைவி ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹரி வைரவன் சிகிச்சையில் இருந்தபோது வெளியான இந்த வீடியோ அப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

    உதவி செய்தும் பலனில்லை

    உதவி செய்தும் பலனில்லை

    ஹரி வைரவனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்ததும் விஜய் சேதுபதி, சூரி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட மேலும் சில நடிகர்கள் நிதி உதவி செய்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த ஹரி வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிகிச்சை முடிந்தும் மீண்டும் நடிக்க வருவார் என அவரது மனைவி நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், ஹரி வைரவன் உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் ஹரி வைரவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Hari Vairavan is famous for acting in the films Vennila Kabadi Kuzhu, and Naan Mahaan Alla. In this case, Hari Vairavan passed away early today due to ill health. Following this, celebrities and fans are mourning his death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X