விரைவில் ஆட்டத்தை துவங்கும் வெண்ணிலா கபடி குழு 2
வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.
சென்னை: சுசீந்தரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
2009ஆம் ஆண்டு அறிமுக சுசீந்தரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அறிமுக நாயகனாக நடித்த படம் வெண்ணிலா கபடி குழு. சூரி, அப்புக்குட்டி காமெடியில் கலக்கினார்கள். மேலும் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுத்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கபடி பயிற்சியாளராக கிஷோர் நடித்திருந்தார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் செல்வசேகரன்.
வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தில் பயிற்சியாளராக நடித்த கிஷோர் இந்தப்படத்திலும் பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் சூரி, அப்புக்குட்டி ஆகியோரும் அப்படியே இந்தப் படத்திலும் நடிக்கின்றனர். கேப்டன் விஷ்ணுக்கு பதில் நடிகர் விக்ராந்த் நடிக்கிறார். நாயகி சரண்யா மோகனுக்குப் பதில் அர்த்தனா பினு நடிக்கிறார். இவர்களைத் தவிர வில்லன் பசுபதி, இசையமைப்பாளர் என அதே ஆட்கள் இந்தப் படத்திலும் பணியாற்றுகின்றனர்.
வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தில் கேப்டன் விஷ்ணு இறந்துவிட்டதால் அவரால் இந்தப் பாகத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் அவரது நண்பன் விக்ராந்த் இந்தப் படத்தில் களம் இறங்குகிறார்.


Click it and Unblock the Notifications











