Vairamuthu - மீ டூ ஒரு கன்றாவியான விஷயம்.. வைரமுத்துவுக்காக சின்மயியை வெளுத்து வாங்கிய நடிகை
சென்னை: Vairamuthu (வைரமுத்து) மீ டூ என்பது ஒரு கன்றாவியான விஷயம் என நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் வைரமுத்துவுக்காக சின்மயியை நிர்மலா வெளுத்து வாங்கிவிட்டார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
உலகம் முழுவதும் இருக்கும் பிரபலங்கள் மீ டூ என்பதன் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேச ஆரம்பித்தனர். அதன்படி இந்தியாவில் இருக்கும் பிரபலங்களும் தங்களது மௌனத்தை கலைத்தனர். அப்படி பல குற்றச்சாட்டுக்கள் பலர் மீது வைக்கப்பட்டது. அவற்றில் சிலர் வைத்த குற்றச்சாட்டுக்களில் உண்மைத்தன்மையே இல்லை என்ற பேச்சும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சின்மயி: அந்தவகையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது கடந்த 2018,2019ஆம் ஆண்டு வாக்கில் சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதாவது பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது தன்னிடம் வைரமுத்து தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று கூறியிருந்தார். பல முறை தேசிய விருது வென்ற, தமிழ் சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தில் இருக்கும் வைரமுத்து மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டில் பொய்: இதுதொடர்பாக சின்மயி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமும் அளித்தார். ஆனால் சின்மயியின் குற்றச்சாட்டின் பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. உண்மையில் வைரமுத்து அப்படி நடந்திருந்தால் அப்போதே சின்மயி வெளியில் கூறியிருக்க வேண்டியதுதானே என பலர் கூறினர். அதற்கு சின்மயியோ, வைரமுத்துவின் பின் பெரிய அரசியல் பலம் இருக்கிறது அதனால்தான் தன்னால் சொல்ல முடியவில்லை என கூறியிருந்தார். எல்லாம் சரி, எதற்காக தன்னிடம் தவறாக நடந்தவரை தன்னுடைய திருமணத்துக்கு அழைத்து அவரிடம் ஆசீர்வாதமும் வாங்க வேண்டுமா என மறுகேள்வி வைக்கப்பட்டது.
அடுத்த குற்றச்சாட்டு: சின்மயி வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் வைரமுத்து இதுவரை பதில் ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறார். அதுமட்டுமின்றி வைரமுத்து மீது உண்மையில் தவறு இருந்தால் சின்மயி சட்டரீதியாக சந்திக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறிவரும் சூழலில் சமீபத்தில் பாடகி ஒருவரும் வைரமுத்து மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் இவர்கள் இப்படி வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வைப்பதற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

வெளுத்து வாங்கிய நடிகை: இந்நிலையில் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீ டூ குறித்தும், புகார் அளித்தவர்கள் குறித்தும் வெளுத்துவாங்கியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், " மீ டூ மாதிரியான பிரச்னைகள் அந்தக் காலத்தில் கிடையாது. மீ டூ என்பது ஒரு கன்றாவியான விஷயம். இன்றைக்கு மீ டூ என்று சொல்பவர்கள் என்று என்ன செய்துகொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு விதத்துல வேலை நடக்க வேண்டும் என்றுதானே ஒத்துக்கொண்டு போனார்கள்.
களங்கம்: அந்த மனிதர் (வைரமுத்து) பேரன் - பேத்தி எடுத்து நல்ல அந்தஸ்தில் இருக்கிறார். இப்போது வந்து எனக்கு மனது அறுக்கிறது, துடைக்கிறது என்று வாயை ஏன் திறக்க வேண்டும். அப்போது ஏன் இவர்கள் சென்றார்கள். இந்த மீ டூ என்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். வேலை நடக்க வேண்டும் என்பதற்காக என்னவோ செய்துவிட்டு இப்போ வந்து மீ டூ என்று ஆரம்பிக்கிறார்கள். அப்போது ஏன் பேசாமல் இருந்தார்கள். நல்ல அந்தஸ்துக்கு அவர் வந்த பிறகு அவர் மேல் களங்கம் ஏற்படுத்த வெயிட் பண்ணிட்டு இருந்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











