Venom Review: குழந்தைகள் கொண்டாடும் வெற்றி.. வெனம் - தி லாஸ்ட் டான்ஸ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: Venom: The Last Dance படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தை பார்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ஹாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் படமான ஸ்பைடர் மேன் படத்தின் 3ம் பாகத்தில் ஸ்பைடர்மேனை திடீரென ஒரு வெனம் தாக்கி விடும். அந்த பாகம் முழுவதும் கருப்பு ஸ்பைடர்மேனாக மாறி அந்த காலத்திலேயே டாபி மார்குயிர் மிரட்டி எடுத்திருப்பார். அதன் பின்னர் அந்த வெனத்திடம் இருந்து தப்பிக்க வேறு ஒருவரிடத்தில் அது வேதாளம் போல ஏறிக் கொள்ளும்.

டாம் ஹார்டி நடிப்பில் வெளியான வெனம் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது வெனம் தி லாஸ்ட் டான்ஸ் எனும் படம் இன்று வெளியாகிறது. அதன் ப்ரீமியர் காட்சிகள் வெளியான நிலையில், விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வெனம் படத்தையும் விட்டு வைக்காமல் ப்ளூ சட்டை மாறன் வச்சு செய்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: மார்வெல் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம் என்றால் அது டெட்பூல் மற்றும் வால்வரின் இணைந்து கலக்கிய படம் தான். அந்த படம் தான் பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் வெளியான ஜோக்கர் 2 திரைப்படம் அட்டு ஃபிளாப் ஆகிவிட்டது. இந்நிலையில், இந்த வெனம் தி லாஸ்ட் டான்ஸ் தப்பித்ததா? இல்லையா? என்பதற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தில் பாதி படம் சூப்பராக இருக்கு எனக் கூறியுள்ளார்.
செம சேட்டை: டாம் ஹார்டி உடம்பை வெனம் கட்டுப்படுத்தி அவரை ஆரம்பத்தில் கொடூர வில்லனாக காட்டி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அதை அவர் கட்டுப்படுத்தி உலகை காப்பாற்றும் நபராக மாறினார். அதன் பிறகு உலகத்தை விட்டே அதை அனுப்பி வைக்க அவர் முந்தைய பாகத்தில் முயற்சி செய்திருப்பார். அதன் கதை முடிந்தது என்று பார்த்தால் மீண்டும் பூமிக்கு வந்து இவர் மீது வெனம் ஏறிக் கொண்டு செய்யும் சேட்டைகளுக்கு குறைவே இல்லை என்றும் முதல் பாதி முழுக்க கலாட்டாவாக படம் செல்வதாக பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

அரைத்த மாவு: அயன்மேன் 3ம் பாகத்தில் ஒரு பட்டனை தட்டியதும் உள்ளே இருந்து பல அயன்மேன்கள் வருவதை போல இந்த படத்திலும் அப்படியொரு அரைத்த மாவு காட்சியையே மார்வெல் வைத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விட்டு விளாசியுள்ளார். மல்டிவெர்ஸ் ஆரம்பித்ததில் இருந்தே மார்வெல் படங்களில் இதே பொழப்பா போய்விட்டது என்றும் கலாய்த்துள்ளார். இந்த ஆண்டு வெளியான டெட்பூல் படத்திலும் ஏகப்பட்ட டெட்பூல் வேரியன்ட்களும், வால்வரின் வேரியன்ட்டுகளும் இடம்பெற்றிருக்கும். அதே பிரச்சனை தான் இங்கேயும் என்கிறார்.
குழந்தைகள் கொண்டாடும் வெற்றி: தமிழ் சினிமாவில் வருவதை போலவே முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார் என்கிற ரீதியில் தான் இந்த படமும் இருக்கு என்றும் நீங்கள் மார்வெல் ரசிகராக இருந்து பல படங்களை பார்த்திருந்தால் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்றும் மார்வெல், டிசி படங்களை பார்க்கவே இல்லை என்றால், உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை அழைத்துக் கொண்டு நல்ல 3டி தியேட்டரில் படத்தை காட்டினால் அவர்கள் என்ஜாய் பண்ணுவார்கள் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். கோட் வேர்ட் அக்சப்டட்!


Click it and Unblock the Notifications











