கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு… விமானத்தில் பறந்து அப்டேட் கொடுத்த சிம்பு !
சென்னை : வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளது.
இதற்காக மும்பை சென்ற, சிம்பு விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடிக்கிறார், சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் கன்னட நடிகை கயடு லோகர் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு
கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களைத் தொடர்ந்து என்பது முறையாக இந்த படத்தில் கௌதம் மேனன், சிம்பு இணைகிறார்கள். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பாடலாசிரியராக தாமரையும், இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

2ம் கட்டபடப்பிடிப்பு
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள். செப்டம்பரில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

மும்பையில் படப்பிடிப்பு
3ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என்று ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் 3ம் கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்வதாக சிம்பு விமானத்தில் செல்லும் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில், கறுப்பு மாஸ்க் அணி கொண்டு இருக்கிறார் சிம்பு இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏ.ஆர் ரஹ்மான் இசை
மும்பையில் சிம்புவின் சண்டைக்காட்சிகளை படக்குழுவினர் எடுக்க உள்ளனர். இதையடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னை வர உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு முடியும்
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. சிம்பு இப்படத்திற்காக கடுமையாக உழைத்து 15 கிலோ வரை எடையை குறைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











