Don't Miss!
- Sports
ஐபிஎல்- கடைசி இடத்தை பிடிக்கப்போவது யார்? அவமானத்தை தவிர்க்க சென்னை, மும்பை கடும் போட்டி
- Finance
பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் ஆக பெயர் மாற்றம்.. கிடுகிடுவென 10% ஏற்றம் கண்ட ருச்சி சோயா!
- News
அசோக்நகரில்.. நைட் 1 மணிக்கு.. நிவேதா பின்னாடியே சென்ற ஓலா பைக் டிரைவர்.. அப்பறம் என்னாச்சு?
- Automobiles
ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!
- Technology
"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!
- Lifestyle
கர்ப்ப காலத்தில் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது பாதுகாப்பானதா? குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய்யுடன் களத்தில் குதிக்கும் சிம்பு படம்... மாநாடு அளவுக்கு வெற்றி தருமா?
சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் அவருக்கு சிறப்பாக வெற்றியை அளித்துள்ளது.
அடுத்தடுத்து கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.
இந்நிலையில் கௌதம் மேனன் படத்தின் ரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அப்டேட் தெரிவித்துள்ளார்.
அடுத்த
குத்தாட்டத்திற்கு
ரெடியாகும்
சமந்தா...
இந்த
முறை
யார்கூடன்னு
பாருங்க

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் லூப் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வித்தியாசமான திரைக்கதையை கொண்டிருந்தது.

கவனமான திரைக்கதை
இந்தப் படத்தில் ஒரே விஷயங்கள் மறுபடி மறுபடி வருவதாக அமைந்திருந்த போதிலும் அந்த திரைக்கதையை மிகவும் கவனத்துடன் கையாண்டு சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா இருவரின் நடிப்பும் வெற்றிக்கான காரணங்களாக அமைந்துள்ளன.

சிம்பு உற்சாகம்
இந்நிலையில் இந்தப் படம் கொடுத்த வெற்றி, டாக்டர் பட்டம் உள்ளிட்ட அடுத்தடுத்த மகிழ்ச்சி தந்துள்ள உற்சாகத்துடன் சிம்பு தனது அடுத்த படமான கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் 5 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட், கேஜிஎஃப் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது வெந்து தணிந்தது காடு படமும் இணைந்துள்ளது.

ஜெயமோகன் கதை
இதையொட்டி இந்தப் படத்தின் சூட்டிங்கை இந்த மாதத்திற்குள் முடித்துவிட்டு ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ள நிலையில், படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் கயடு லோஹர்.

ஏஆர் ரஹ்மான் இசை
படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். பாடலாசிரியராக தாமரை உள்ளார். படத்தில் ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேகர் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை சிறப்பான வகையில் அமைத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
இதையடுத்து பத்து தல மற்றும் கொரோனா குமார் என அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்குகளில் பங்கேற்க உள்ளார் சிம்பு. இதில் கொரோனா குமார் படத்தை ஐசரி கணேஷே தயாரிக்கவுள்ள நிலையில் அந்தப் படமும் இந்த ஆண்டே ரிலீசாக உள்ளதாக ஐசரி கணேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.