முத்துவின் பயணம் ஆரம்பம்.. வெந்து தணிந்தது காடு படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

சென்னை: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசாரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை தாறுமாறாக குறைத்து நடித்து வரும் சூழலில் வெந்து தணிந்தது காடு முத்துவின் ஜர்னி க்லிம்ஸிஸ் வரும் டிசம்பர் 10ம் தேதி படக்குழு வெளியிட உள்ளது

 டைம் லூப் பாணியில்

டைம் லூப் பாணியில்

நடிகர் சிம்பு சொல்லிவைத்தது போல அட்டகாசமான கம்பை கொடுத்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஈஸ்வரன் வெற்றிக்குப் பிறகு சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. டைம் லூப் பாணியில் உருவான மாநாடு திரைப்படம் அரசியல் ஆக்சன் திரில்லர் கதை களத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளது. இதில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது

 கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்

இந்த நிலையில சிம்பு இதுவரை நடிக்க ஒப்பந்தமாகி இருந்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையாட, கார்த்திக் டயல் செய்த எண் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 உடல் எடையை குறைத்த

உடல் எடையை குறைத்த

அந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என முதலில் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின் படக்குழுவில் வெந்து தணிந்தது காடு என்ற டைட்டிலை சூட்டியுள்ளது . ஏற்கனவே உடல் எடையை குறைத்த சிம்பு இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்திற்காக மேலும் எடையை குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Simbhu -வ மட்டும் பாராட்டாதீங்க Kalyani Transformation பத்தி தெரியுமா! | Maanadu
 எரியும் நெருப்பிற்கு நடுவே

எரியும் நெருப்பிற்கு நடுவே

சிம்புவின் இந்த தோற்றத்தை பார்த்து அனைவரும் பிரமித்துப் போய் இருக்க வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. அதில் சிம்பு கையில் குச்சியை ஊன்றியவாறு காட்டில் பற்றி எரியும் நெருப்பிற்கு நடுவே நின்று கொண்டு இருக்கின்றவாறு இருந்தது.

 முத்துவின் ஜர்னி

முத்துவின் ஜர்னி

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் படக்குழு சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் முத்து என வைக்கப்பட்டுள்ளது. எனவே முத்துவின் ஜர்னி க்லிம்ஸிஸ் வரும் டிசம்பர் 10ஆம் தேதி மதியம் 1.26 க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X