வெறித்தனமான சாதனை.. யூடியூப்பில் 80 மில்லியன் வியூஸ்.. ஹிட்டித்த பாட்டு!

சென்னை : பிகில் படத்தில் வரும் வெறித்தனம் பாடல் யூடியூப்பில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது.

Recommended Video

Bigil Verithanam massive record breaking | Entry Song

தமிழ் சினிமா மற்ற மொழி திரைப்படங்களிலிருந்து எப்போதுமே தனித்து நிற்கும் அதற்கு காரணம் உறவு, குடும்பம் மற்றும் மண் சார்ந்த படங்கள் தமிழில் அதிகமாக இருக்கும். வசனங்கள் கூட மற்ற மொழிகளிலிருந்து வேறுபட காரணம் பல்வேறு விதமாக மண் சார்ந்து பேசும் வழக்கம் தமிழில் உள்ளதால்தான். இவை அனைத்தும் தாண்டி ஒரு முக்கிய காரணம் தமிழ் பட பாடல்கள்தான்.

 Verithanam crosses 80 million views on Youtube

தமிழ் சினிமாவின் தொடக்கத்திலிருந்தே பாடல்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. பத்து அல்லது இருபது வருடங்களை கூட பாடல்களால் கடத்தும் திறன் தமிழ் சினிமாவில் உண்டு. அதே போல் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கமெர்சியல் சினிமா அதிகமாக விரும்பி பார்க்கபட்டது அந்த நேரத்தில்தான் விஜய், அஜித் போன்றவர்கள் மாஸ் ஹீரோவாக மாறிய தருணம்.

அப்போதுதான் இந்த ஓபனிங் சாங் என்ற பார்முலா உருவானது. அதை தொடர்ந்து இன்று வரை மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஓபனிங் சாங் இல்லாமல் இருப்பது இல்லை. பொதுவாக தளபதி விஜய் படங்கள் என்றாலே ஓபனிங் சாங் பக்காவாக அமைந்து விடும் ஆடுங்கடா என்ன சுத்தி, தாம் தக்க தீம் தக்க, சூரியன தொட்ரா போன்ற பாடல்கள் வந்த போது பலராலும் ரசிக்கப்பட்டு ஹிட் அடித்தது.

 Verithanam crosses 80 million views on Youtube

அதே போல் இன்றுவரை அவரின் படங்களில் ஓபனிங் சாங் என்றாலே ஹிட்தான். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் பலராலும் ரசிக்கப்பட்டு ஹிட் ஆனது. இன்று அந்த பாடல் யூடியூப்பில் என்பது மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் விஜயுடன் நான்காவது முறையாக இணைந்த பிகில் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது குறிப்பாக இந்த வெறித்தனம் பாடல் வெறித்தனமான ஹிட் அடித்தது.

 Verithanam crosses 80 million views on Youtube

தற்போது 80 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் நடிகர் அஜித் அவர்களுக்கும் நல்ல பாடல்கள் அமைவது வழக்கம் அதை தொடர்ந்து சமீபத்தில் டி.இமான் இசையில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற டங்கா டங்கா என்ற பாடல் யூடியூபில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமின்றி டி.இமான் அவர்கள் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார். இன்னும் பல பார்வையாளர்களை இந்த இரண்டு பாடல்களும் பெரும் என்பதில் பல ரசிகர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X