திடீர் டிரெண்டிங்கில் வெறித்தனம் ஹேஷ்டேக்.. என்ன காரணம் தெரியுமா?

Recommended Video

Bigil Box Office:பிகில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை

சென்னை: ஜி தமிழ் விருது விழா நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த வருடத்தில் உங்களை செமயா கொண்டாட வைத்த Hero Introduction Song எது? கமெண்ட் பண்ணுங்க என ஜி தமிழ் போட்ட ட்வீட் தான் விஜய் ரசிகர்களை உடனடியாக 'வெறித்தனம்' ஹேஷ்டேகை டிரெண்டிங்கில் கொண்டு வர காரணமாக அமைந்துள்ளது.

இன்று காலை முதலே அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் போர் நடத்தி ஓய்ந்திருந்த நேரத்தில் மீண்டும் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் டிரெண்டிங்கை தங்கள் கைவசம் பிடித்துள்ளனர்.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக் ஒன்றும் சர்ப்ரைஸாக காத்திருக்கிறது என விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சன் டே கூட லீவு இல்லை

சன் டே கூட லீவு இல்லை

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ட்விட்டரில் சண்டை போட்டுக் கொள்ள சன் டே கூட லீவு விடமாட்றாங்க, இன்று அதிகாலையிலே தொடங்கி சண்டை, பல லட்சம் ட்வீட்டுகளை இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு போட்டு ட்விட்டருக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுத்து விட்டு பின்னர் ஓய்ந்தது.

2019ன் சிறந்த இன்ட்ரோ சாங்

விஜய் டிவியை தொடர்ந்து தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியும் பிரம்மாண்ட சினிமா நிகழ்ச்சியை நடத்த தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த வருடத்தில் உங்களை செமயா கொண்டாட வைத்த Hero Introduction Song எது? கமெண்ட் பண்ணுங்க என ஜி தமிழ் ஒரு ட்வீட்டை போட, ரஜினியின் பேட்ட படத்தில் வந்த மரண மாஸ், அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வந்த வேட்டி கட்டு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வந்த எங்க அண்ணன் பாடல் மற்றும் தீபாவளி விருந்தாக வெளியான விஜய்யின் பிகில் படத்தில் வெளியான வெறித்தனம் ஆகிய பாடல்களை அந்த அந்த நடிகரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெறித்தனம்

இந்நிலையில், இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இன்று ட்விட்டரை விட்டு விடக் கூடாது என வெறித்தனம் ஹேஷ்டேகை உருவாக்கி வச்சு செய்து வருகின்றனர்.

அண்ட் தி சாங் இஸ்

திரையின் திருவிழா நிகழ்ச்சிக்காக ஜி தமிழ் ரசிகர்களிடம் நடத்திய ட்விட்டர் கருத்துக் கணிப்பில், விஜய்யின் வெறித்தனம் பாடல் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் அண்ட் தி சாங் இஸ் வெறித்தனம் என ஜி தமிழ் அறிவிக்கும் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

6 மணிக்கு சர்ப்ரைஸ்

இன்று காலை முதலே ட்விட்டரை ஆட்சி செய்து வரும் விஜய் ரசிகர்கள், இன்று மாலை பெரிய மாஸ் அப்டேட் காத்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட உள்ளதால், அந்த சர்ப்ரைஸுக்காக மாலை 6 மணிக்கு ரெடியாக இருக்கவும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X