twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Verithanam: வெறித்தனமாக சாதனை படைக்கும் விஜய்யின் 'வெறித்தனம்'.. இது நம்ம சனத்தின் வெறித்தனம்..!

    பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    |

    சென்னை: பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.

    பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் முறையாக 'வெறித்தனம்' எனும் பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    ஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கும் சண்ட காரி தி பாஸ்ஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கும் சண்ட காரி தி பாஸ்

    வெறித்தனமான சாதனை

    வெறித்தனமான சாதனை

    வெளியாகிய 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது வெறித்தனம் பாடல். இதுவரை 6.85 லட்சம் பேர் பாடலை லைக் செய்துள்ளனர். 52 ஆயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.

    ரசிகர்கள் உற்சாகம்

    ரசிகர்கள் உற்சாகம்

    வெறித்தனம் பாடலை தீயாக பரப்பி வருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த பாடல் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பாடலின் நடுவே இடம்பெறும் "சுராங்கனிக்கா மாலு கண்ணா" பகுதி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

    மாஸ் வரிகள்

    மாஸ் வரிகள்

    பாடல் வரிகளும் விஜய்யின் மாஸ் ஹீரோயிசத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. "நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம், என்னா இப்போ லோக்கலுன்னா நாம கெத்தா உலாத்துன்னோம்", என்பது உள்ளிட்ட வரிகளை விஜய்யே தனது சொந்த குரலில் பாடுவது, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியராக ஆகிவிட்டார் விவேக்.

    இதிலும் குழந்தைகள்

    இதிலும் குழந்தைகள்

    விஜய் படங்களிலும், பாடல்களிலும் குழந்தைகளை அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். தெறி படத்தில் இருந்தே அட்லி இதனை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த பாடலிலும் நிறைய குழந்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் அட்லி. எனவே படம் வெளியான பிறகு இந்த பாடல் மேலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம்.

    விரைவில் முழு இசை

    விரைவில் முழு இசை

    பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது. விரைவில் முழு இசையும் வெளியிடப்பட உள்ளது. அதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

    English summary
    The Verithanam song form Vijay's Bigil has crossed 4.2 million views within 12 hours from its official release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X