பிகில்: மேலும் ஒரு பாடல் லீக்கானது.. இப்படியே படம் முழுக்க வந்துரும் போல! அதிர்ச்சியில் படக்குழு!
சென்னை: பிகில் படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் இணையத்தில் கசிந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிகில் படம் நடிகர் விஜயின் 63வது படமாகும். இந்த படத்தின் மூலம் இயக்குநர் அட்லி நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
இந்தப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிக்கிறார்.

விஜய் பாடிய பாடல்
வரும் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் இணையத்தில் லீக்காகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடிய வெறித்தனம் என்ற பாடல்தான் இணையத்தில் கசிந்துள்ளது.
ஹேஷ்டேக் ட்ரென்ட்
இணையத்தில் கசிந்துள்ள அந்த பாடல் வைரலாகியுள்ளது. இதனையே #VerithanamLeaked என்ற ஹேஷ்டேக்கில் ட்ரென்ட் செய்தனர்.

அதிகாரப்பூர்வ வெளியீடு
ஏற்கனவே பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் ரிலீஸானது. இதைத்தொடர்ந்து படக்குழு அந்த பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக வந்துடும்
இதேபோல்தான் நடிகர் விஜய் பைக் ஓட்டும் காட்சி ஒன்றும் படத்தில் வைரலானது. இப்படியே போனால் தீபாவளிக்குள் மொத்த படமும் கொஞ்சம் கொஞ்சமாக வந்துவிடும் போல என கிண்டலடிக்கின்றனர் நெட்டிசன்கள்.

படக்குழுவின் வேலையா?
அதேநேரத்தில் வெறித்தனம் பாடல் உண்மையிலேயே லீக்கானதா, அல்லது விஸ்வாசம் ஹேஷ்டேக் ட்ரென்ட்டானதால் படக்குழுவினரே இந்த வேலையை பார்த்தனரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அந்த குரல் விஜயின் குரல் போல் இல்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











