இன்னா இப்போ லோக்கலுன்னா.. மெகா ஹிட்டான வெறித்தனம் சாங்.. குஷியான ரசிகர்கள்!
சென்னை : விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் வரும் வெறிதனம் பாடலை யூடியூப்பில் சுமார் 50 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர்.
தீபாவளி அன்று இரண்டு படங்கள் வெளியாகின அதில் இரண்டுமே பெரும் வெற்றி பெற்றது. அதில் விஜய் நடித்து அட்லி இயக்கிய பிகில் மற்றும் கார்த்தி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி.

பிகில் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் படம் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இதனை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் சாந்தனு போன்ற பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இதனிடையே விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் வரும் வெறிதனம் இந்த பாடல் யூடியூப்பில் சுமார் 50 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். கடந்து ஆண்டு அதிகமாக கொண்டாடப்பட்ட பாடலும் இதுதான். விஜயின் கலக்கல் டான்ஸ் பூவையாரின் நடனம் என பட்டி தொட்டி முதல் ஹிட்டாக காரணமாக அமைந்தது.
Recommended Video
இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக்கி கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் வரும் மற்ற பாடல்களும் பல சாதனைகள் புரியும் என்று ரசிகர்களால் சொல்லப்படுகிறது இப்படத்திற்கு ஏ .ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











