For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்

|

சென்னை: இந்திய சுதந்திர போராட்ட வீரனின் மகனாக பிறந்து நாடகத்தின் மீதிருந்த தீராத தாகத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாடகம் மற்றும் சினிமா என இரண்டு துறையிலும் சாதித்ததோடு, பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதாவின் 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த பகுத்தறிவு கலைஞனுக்கு நமது வணக்கங்களை சமர்பிப்போம். செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் அவரது போர்வாளாக வாழ்ந்து மறைந்தவர் எம். ஆர். ராதா.

நாடக உலகின் சூப்பர் ஸ்டார், தன்னம்பிக்கை நிரம்பிய தனிப்பெரும் கலைஞன், பகுத்தறிவு கருத்துக்களின் பிரச்சார பீரங்கி, யாருக்கும் அடங்காத பிள்ளை, அரசியலில் கலகக்காரர், யாராவது சீண்டினால் மேடையில் இடியாகவும் தனிமையில் வெடியாகவும் வெடிப்பார். அவர் யார் என்று தெரிகிறதா.

Versatile Actor M.R.Radha’s 40th Death Anniversary

அவர் தான் யாருக்கும் அஞ்சாத ராஜா எம்.ஆர்.ராதா. மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் நாயுடுவின் சுருக்க பெயர் தான் எம்.ஆர்.ராதா அவரின் நினைவு நாளான செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று அவரின் அருமை பெருமைகளை நினைவுகூர்ந்து வணங்குவோம்.

இந்திய ராணுவத்தில் சேர்ந்து முதலாம் உலக போரில் பங்கேற்று தன் உயிரையே இந்திய மண்ணிற்காக அர்ப்பணித்த வீரர் ராஜகோபாலனின் மகனாக பிறந்த ராதா வீட்டிற்கு அடங்காத பிள்ளை. பள்ளி படிப்பிலும் நாட்டமில்லை. சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியே வந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டர் வேலை பார்த்தார்.

விஜய் கெத்து.. எனக்கு தளபதிதான் எப்போதும் பிடிக்கும்.. போட்டுடைத்த விக்ரம் மகன் துருவ்.. வைரல்!

அதன் மூலம் பலரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி பழக்கம் பெற்ற ஒருவர் தான் ஆலந்தூர் அரங்கசாமி நாடகக்குழுவை நடத்தும் அரங்கசாமி. ராதாவின் துறுதுறுப்பான சுறுசுறுப்பும் அவர்க்கு பிடித்து போகவே நாடகத்தில் நடிக்கும் விருப்பம் பற்றி கேட்டறிந்தார் அரங்கசாமி. பிறகு ராதாவை நடக்குழுவில் சேர்த்துக்கொண்டார்.

நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் வீசப்படும் குழந்தைகளில் ஒரு குழந்தையாக மேடை ஏறியதுதான் ராதாவின் முதல் நாடக அனுபவம். இப்படி பல நாடகங்களில் மேடையேறி அவரது திறமையை வெளிப்படுத்திய ராதாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது உறவினர்கள் வந்து அவரை அழைத்துச்சென்றனர்.

நாடகத்தின் மீது மனம் அலைபாய்ந்ததால் வீட்டில் இருக்க முடியாமல் மறுபடியும் வீட்டை விட்டு ஓடி போனார். தான் மட்டும் ஓடாமல் தனது தம்பியையும் உடன் அழைத்து கொண்டு மைசூர் சென்றார். அங்கு சாமு அண்ணா நாடக கம்பெனியில் சேர்ந்து கொண்டனர். பசிக்கு சோறும், நடிக்க வாய்ப்பும் கூடவே அடியும் உதையும் கிடைத்தது.

நடிப்பு வருவதற்காக அடிப்பது அந்த நாடக கம்பெனியின் வழக்கம். அதை ராதாவின் தம்பி பொறுக்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ராதாவோ அனைத்தையும் தாங்கி கொண்டு ஜெகநாத ஐயர் கம்பெனியில் சேர்ந்தார். அங்குதான் பல புகழ்பெற்ற நாடக திரையுலக கலைஞர்களை உருவாக்கினர். அதே நாடக கம்பெனி தான் எம்.ஆர்.ராதாவின் திறமையையும் செதுக்கியது. இப்படி ஆரம்பித்த அவரின் வாழ்க்கை பல போராட்டங்களுக்கு பிறகு, சினிமா நாடகம் என இரண்டையும் கலக்கிய ஒரே நடிகராவார். அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் 3021 நாட்கள் அரகேற்றப்பட்டது மிகப்பெரிய சாதனை.

எம்.ஜி.ஆரை ராமச்சந்திரா என்றும் சிவாஜி கணேசனை கணேசா என்றும் அன்போடும் உரிமையோடும் அழைப்பர். மற்ற நடிகர்களை எல்லாம் மரியாதை இல்லாமல் வாடா போடா என்று அழைப்பது தான் வழக்கம். மிகவும் தைரியமான குசும்புகாரர். அவரது சில நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அப்படி இருந்தும் அதை அரங்கேற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

என்.எஸ்.கே அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்காக துப்பாக்கி ஒன்றை வாங்கினார். அந்த செய்தி என்.எஸ்.கேயின் காதுகளுக்கு எட்டவே, அவர் நண்பன் கையால் சாவதில் சந்தோஷம் என்றுள்ளார். அதை கேட்டு மனம் மாறினார் ராதா.

ஒரு முறை எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் வைத்து துப்பாக்கியில் சுட்டு தானும் சுட்டுக்கொண்டார் என்ற ஒரு தகவல் உள்ளது. இதற்காக 7 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். பிறகு வெளியில் வந்ததும் நண்பர்கள் இருவரும் துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிச்சு இருக்காங்க நானும் சாகல, ராமச்சந்திரனும் சாகல எல்லாமே டூப்ளிகேட் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

எம்.ஆர்.ராதாவிற்கு எழுத படிக்க தெரியாது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் யாரையாவது வாசிக்க சொல்லி அதை அப்படியே மனப்பாடம் செய்து கொள்வார். ரத்த கண்ணீர், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பலமும், பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, தாய் சொல்லை தட்டாதே, பெரிய இடது பெண் உள்ளிட்ட 118 படங்களில் தனது திறமையான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். மேற்கண்ட அனைத்து படங்களிலும் வாழ்ந்து காட்டியவர். 1963ஆம் ஆண்டில் 22 படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

மு.கருணாநிதி என்று அழைத்தவரை கலைஞர்.கருணாநிதி என்று பட்டம் கொடுத்து அழைத்தது எம்.ஆர். ராதா தான். கிண்டலும் கேலியோடும் அவர் பேசும் பகுத்தறிவு கருத்துக்கள் பாமரனுக்கும் கொண்டு சேர்த்தது. புராண கதைகளையும் நாடங்களையும் விமர்சிப்பது பெரியாரின் வழக்கம். அதை அப்படியே நாடங்களில் விமர்சிப்பது ராதாவின் வழக்கம். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியவர். இருப்பினும் சமர்த்தியமாகவும் துணிச்சலாகவும் வெளியில் வந்து விடுவார்.

அரசியல் சர்ச்சைகளுக்கு நடுவிலும் தனது நாடகப் பணிகளை கவனித்து வந்தார் ராதா. 1979ஆம் ஆண்டு வெளிவந்த பஞ்சாமிர்தம் படம் தான் அவர் கடைசியாக நடித்த படம். நாடகம், அரசியல், பிரச்சாரம் என்று இயங்கி வந்த ராதாவின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து வந்தது. அதன் கூடவே மஞ்சள் காமாலை நோயும் தாக்கவே மிகவும் மோசமானது.

பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா, பெரியாரின் 100ஆவது பிறந்த நாளான 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மரணமடைந்தார். அவரின் நினைவு நாளான இன்று, அவர் கடந்து வந்த பாதையை திருப்பி பார்த்தால் எத்தனை எத்தனை தடைக்கற்களை தாண்டி அவர் வந்துள்ளார் என்பது நமக்கு புரியும். அந்த பகுத்தறிவு கலைஞனுக்கு நமது வணக்கங்களை சமர்பிப்போம்.

English summary
Born as the son of an Indian freedom fighter, M.R.Radha left home after a life of intense thirst for drama and achieved success in both theater and cinema. We present our salutations to the rational artist today, September 17, the anniversary of M.R Radha.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more