அய்யோ என்ன கொடுமை.. அழித்த புற்றுநோய்.. உயிரிழந்தார் மதன் பாப்.. உச்சக்கட்ட அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருந்தவர் மதன் பாப். இசையமைப்பாளராக தனது கரியரை தொடங்கிய அவர்; காலப்போக்கில் நடிகராக மாறினார். தனது தனித்துவமான சிரிப்பு, நடிப்பால் அனைவரையும் ஈர்த்த அவருக்கு கடந்த சில காலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சூழல் இப்படி இருக்க சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரை கொண்டவர் மதன் பாப். இசையமைப்பாளராக வேண்டுமென்பது அவரது கனவு. அதற்கேற்றபடி இசையையும் கற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் எல்லாம் வேலை செய்திருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு. சூழல் இப்படி இருக்க அவருக்கு காலப்போக்கில் சினிமாவில் நடிகராகும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் மதன் பாப்: அதன்படி பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து தொடர்ந்து நடிகராகவே பயணப்பட்டார். 90கள், 2000களில் எல்லாம் படு பிஸியான குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் வலம் வந்தவர். விஜய், அஜித், சூர்யா என இப்போதைய டாப் ஸ்டார்களின் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்.

தனித்துவமான மதன் பாப்: அவரது நடிப்பு எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அதே அளவுக்கு அவரது தனித்துவமான சிரிப்பும், எக்ஸ்பிரெஷன்களும் வெகுவாக கொண்டாடப்பட்டன. ப்ரெண்ட்ஸ், ப்ரியமான தோழி, சுந்தரா ட்ராவல்ஸ், ஜெமினி, ரன், சந்திரமுகி, யூத், வில்லன் என அவர் நடித்த படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் அவர் நடிப்பது குறைந்துபோனது. இதற்கிடையே சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்காற்றினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதன் பாப்: சூழல் இப்படி இருக்க அவருக்கு கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய் பாதிப்பு வந்தது. இதனையொட்டி அவர் சிகிச்சையும் எடுத்துவந்தார். எப்படியாவது அவரை உடல்நலம் தேற்றி ஆயுட்காலத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்துவிட அவரது குடும்பத்தினர் தங்களால் முடிந்த அத்தனை செயல்களையும் செய்தார்கள். அவருக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மதன் பாப்: இந்நிலையில் சிகிச்சை எடுத்துவந்த மதன் பாப் சிகிச்சை பலனின்றி அடையாறில் இருக்கும் அவருடைய இல்லத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் மதன் உயிரிழந்ததை உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது உயிரிழப்பு தமிழ் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது குடும்பத்துக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











