வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்களின் கேள்விக்கு இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா!
சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தில் விரைவில் நடிகர் பிரசன்னா இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
திருட்டு பயலே 2, மாஃபியா என வில்லன் ரோலில் மிரட்டி வரும் நடிகர் பிரசன்னா வலிமை படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.
இதுகுறித்து பிரசன்னாவிடமே ஒரு ரசிகர் நேரடியாக ட்வீட் போட்டு கேட்க, அதற்கு அவர் அசத்தலான பதிலைக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்த எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு நேர்கொண்ட பார்வை ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வினோத் ஸ்டைலில்
ஆனால், நேர்கொண்ட பார்வை பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்பதால், தனது ஸ்டைலில் தல அஜித்துக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வினோத் அதற்கான கதையை அஜித் மற்றும் போனி கபூரிடம் சொல்லி வலிமை படத்தை ஆரம்பித்துவிட்டார்.

அப்டேட் இல்லை
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் வரிசையாக வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில், வலிமை படம் குறித்த அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் ரொம்பவே காத்திருக்கின்றனர். ஆனால், படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்புக் கூட இதுவரை வெளியாகாமல் ரகசியம் காக்கப்படுகின்றது.

வில்லன்
இந்நிலையில், அஞ்சாதே, திருட்டுப்பயலே 2 மற்றும் விரைவில் வெளியாகவுள்ள மாஃபியா படத்தின் வில்லனான பிரசன்னா, வலிமை படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.
நேரடியாகவே
இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில், ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம் நேரடியாகவே வலிமை படத்தில் நீங்க நடிக்கிறீங்களா அண்ணா என ட்வீட் போட்டு கேட்டுள்ளார்.
பிரசன்னா பதில்
அதற்கு பதில் அளித்துள்ள பிரசன்னா, இன்னும் இல்லை பிரதர், கன்ஃபர்மேஷனுக்காக வெயிட் பண்ணுகிறேன் என்று அதிரடியாக சொல்லி தல ரசிகர்களுக்கு மறைமுகமாக வெயிட்டான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

இல்லையென்று சொல்லவில்லை
ரசிகர் கேட்ட கேள்விக்கு இல்லை என்று சொல்லாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என பிரசன்னா சொன்னதில் இருந்தே வலிமை படத்தில் நிச்சயம் அவர் இணையவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அர்ச்சனை செய்றேன்
அந்த அப்டேட்டை மட்டும் வாங்கித் தாங்க பிரதர் உங்க பேர்ல மட்டுமில்லை உங்க ஃபேமிலி பெயர்லையே அர்ச்சனை செய்றேன் என தல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கன்ஃபார்ம்
கண்டிப்பா கன்ஃபார்ம் ஆகிடும் பிரசன்னா நீங்க தல அஜித் கூட வலிமை படத்தில நடிப்பீங்க என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











