வெரி கூல்.. தளபதி விஜய் பற்றி ஷாருக்கான் சொன்ன விஷயம்.. அடுத்த படத்தை பத்தி என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: நடிகர் ஷாருக்கான் கிட்டத்தட்ட 29 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்து 30வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் பாட்ஷா திடீர் என தனது ரசிகர்களுடன் உரையாட விரும்பி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

பாலிவுட் நடிகராக இருந்தாலும் கோலிவுட் ரசிகர்கள் நடிகர் விஜய் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்கிற கேள்விக்கு உடனடியாக பதில் அளித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

30 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

நடிப்பு, தயாரிப்பு, ஐபிஎல் என கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் மனங்களை கவர்ந்து வருகிறார் நடிகர் ஷாருக்கான். பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்பட்டு வரும் கிங் கான் தற்போது ரசிகர்களுடன் #AskSrk செக்‌ஷனில் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இத்தனை காலமாக அன்பு செலுத்தி வரும் ரசிகர்களுக்கு நன்றியையும் கூறியுள்ளார்.

மசாலா படங்கள்

மசாலா படங்கள்

உங்களுடைய ரெட் சில்லிஸ் தயாரிப்பு நிறுவனம் எனும் கிச்சனில் இப்போது என்ன வகையான படங்களை கிண்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, செம ஓப்பனாக இப்போதைக்கு வெறும் சில மசாலா படங்களை மட்டுமே என பதில் அளித்துள்ளார்.

உங்க ஹெல்த் எப்படி இருக்கு

உங்க ஹெல்த் எப்படி இருக்கு

கொரோனா போன்ற இக்கட்டான சூழல் இருக்கும் நிலையில் நடிகர் ஷாருக்கானின் உடல் நலம் எப்படி இருக்கு என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஜான் ஆபிரகாம் அளவுக்கு நல்லா இல்லை. ஆனால், ஏதோ பரவாயில்லை ஓடிட்டு இருக்கு என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

தளபதி பத்தி ஒருவார்த்தை

தளபதி பத்தி ஒருவார்த்தை

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை போட்டு, தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தை என தளபதி ரசிகர் கேட்க உடனடியாக Very Cool என பதில் அளித்துள்ளார் நடிகர் ஷாருக்கான். மற்ற நடிகர்கள் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரம் குறைவு காரணமாக அவர் பதில் அளிக்கவில்லை.

அவரை தான் எழுப்பப் போறேன்

அவரை தான் எழுப்பப் போறேன்

அடுத்து 3 இடியட்ஸ் ராஜ்குமார் ஹிரானி உடன் படம் பண்ண போறீங்களா என்கிற கேள்விக்கு நடிகர் ஷாருக்கான். அவரை தான் எழுப்பி அந்த கோரிக்கையை வைக்கணும். ஆனால், அவர் ரொம்ப லேட்டா தூங்குறவரு என பதில் அளித்துள்ளார்.

கண்டிப்பா சொல்றேன்

கண்டிப்பா சொல்றேன்

ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்கப் போகிறாரா? நீண்ட காலம் காத்திருக்கும் நம்ம அட்லி படத்தில் நடிக்கப் போகிறாரா என்பது குறித்து கடைசி வரை பதில் அளிக்கவில்லை. லவுட் ஸ்பீக்கர் போல சத்தமாக அறிவிப்பு வராது.. எப்போதும் போல மென்மையாக எனது படங்கள் உங்கள் நெஞ்சில் பதியும் என சமாளிஃபை பதில் சொல்லி 15 நிமிட உரையாடலை முடித்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X