வெரி குட் நண்பா: விஜய்யை பாராட்டிய ரூ.1 கோடி ராகவா லாரன்ஸ் #Jallikattu
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் விஜய்யை நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகிறார்கள். இல்லை புரட்சி செய்து வருகிறார்கள். அரசியல்வாதிகளின் ஆதரவும் வேண்டாம் திரைத்துறையினரின் ஆதரவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
திரைத்துறையினர் வேண்டுமானால் மெரினா வந்து எங்களுடன் போராடுங்கள் என்கிறார்கள் புரட்சியாளர்கள்.

விஜய்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைய தளபதி விஜய் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். பீட்டாவை நாட்டை விட்டே அனுப்பினால் தமிழ்நாடே மகிழ்ச்சி அடையும் என்றார்.
ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்ட விஜய்யை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

ரூ. 1 கோடி
மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வருபவர்களின் உணவு, நீர், மருந்து செலவுக்காக ரூ. 1 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நல்லது
தமிழகம் முழுவதும் போராடி வருபவர்களுக்கு உணவு, நீர், மருந்து தான் தற்போது முக்கியமாக தேவைப்படுகிறது. அதை வாங்க பணம் தர முன்வந்த ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











