'தரமான சம்பவம்' செய்து ஆன்டி இந்தியன்ஸுக்கு டெடிகேட் செய்த ஜிப்ஸி குழு
சென்னை: ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் வரும் வெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தில் வரும் வெரி வெரி பேட் பாடலின் டீஸரை பார்த்தே பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அந்த பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. காவல் துறையை பற்றி துணிச்சலாக விமர்சித்துள்ளனர்.
ஜிப்ஸி
வெரி வெரி பேட் பாடலில், காக்கி கலரு காக்கி கலரு எதுக்கு எங்கள அடிக்கிற, செத்து போன ஆளுக்கெல்லாம் சிலையை நீயும் திறக்குற இத்து போன எங்கள ஏன்டா திரும்பத் திரும்ப உதைக்கிற என்ற வரிகள் உள்ளன. ராஜு முருகன் தனது துணிச்சலை இந்த பாடல் மூலம் காண்பித்துள்ளார்.

காவலர்கள்
ஸ்டேஷன்ல எதுக்குடா கட்ட பஞ்சாயத்து நடத்துற, ஏவி விட்ட டாகுக்கு எல்லாம் எலும்புத் துண்ட பொறுக்குற பதவி வெறி அக்யூஸ்டுக்கு எல்லாம் பண்ணுறியா ஊழியம், நாலு மர்டர் செஞ்சவன பார்த்தேன் ஷாப்பிங் மாலில என்ற வரிகள் ஸ்ட்ராங்காக உள்ளன.

கொள்ளை
கொள்ளை அடிச்ச மந்திரிமாரு வாரான் ஹெலிபேடுல பொறுக்கிக்கு எல்லாம் படா சைசு பேனர் இந்த ஊருல அவன எல்லாம் கூண்டுல ஏத்த உனக்கு இருக்கா தைரியம், எங்கள போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம், எங்க மண்ணை புடுங்குனவன் ஏரோபிளேனுல பறக்குறான் என்று வெரி வெரி பேட் பாடலில் வரிகள் உள்ளது.
ஆன்டி இந்தியனஸ்
இந்த வெரி வெரி பேட் பாடல் அனைத்து ஆன்டி இந்தியன்ஸுக்கும் சமர்ப்பணம் என்று வீடியோவின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடல் வீடியோவை பார்த்துவிட்டு நெட்டிசன்களுக்கு ஒரே மகிழ்ச்சி தான்.


Click it and Unblock the Notifications











