twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில்லன் நடிகர் கேப்டன் ராஜு உடல் நலக்குறைவால் காலமானார் !

    பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார்

    |

    சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஓமலூரைச் சேர்ந்தவர் கேப்டன் ராஜு. ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் ராஜு, 1981 முதல் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

    Veteran actor Captain Raju passed away

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் கேப்டன் ராஜு. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அவர் நடித்துள்ளார்.

    தமிழில் தர்மத்தின் தலைவன், ஜல்லிக்கட்டு, சூரசம்ஹாரம், ஜீவா, சின்னப்பதாஸ் உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்கள் மறக்க முடியாதவை. ரஜினி, கமல், சத்யராஜ், மோகன் லால், மம்முட்டி என பெரிய நடிகர்களுடன் நடித்தவர் கேப்டன் ராஜு.

    கடந்த ஜூலை மாதம் தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் அமெரிக்கா சென்றுக்கொண்டிருந்தபோது, கேப்டன் ராஜுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக விமானம் ஓமன் நாட்டில் தரையிறக்கப்பட்டு, அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ராஜு, இன்று காலை காலமானார். அவரது உடல் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், திரைத்துறையினரர் அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.

    மறைந்த கேப்டன் ராஜு மனைவி பிரமீளா மற்றும் மகன் ரவி ராஜுவுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The 68 years old veteran actor and director Captain Raju passed away today in Kochi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X