அட பாவமே.. கல்யாணம் ஆன மறுநாளே ஆஸ்பத்திரியில் அட்மிட்.. 75 வயது தேசிய விருது நடிகருக்கு வந்த சோகம்!
கொல்கத்தா: திருமணம் ஆன மறுநாளே பிரபல 75 வயது நடிகர் மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல வங்க மொழி நடிகர் திபாங்கர் டே. வயது 75. இவர் சத்யஜித் ரேயின் சீமபத்தா, ஜன அரண்யா, கனசத்ரு, ஆகன்துக் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
பிரபல முக்கிய இயக்குனர்களான மிருணாள் சென், ரிதுபர்னகோஷ், அபர்ணா சென் உட்பட பலரின் இயக்கத்தில் நடித்துள்ளார்,

தேசிய விருது
மிருணாள் சென்னின் 'பரமா' என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை 1986 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

டோலான் ராய்
இவரும் பிரபல பெங்காலி நடிகை டோலான் ராயும் காதலித்து வந்தனர். அதாவது தாலிகட்டாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். டோலான், அர்ஜுன், சாருலதா, தம்மர் பாய்பிரண்ட் உட்பட பல வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 49.

திருமணம்
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், மறுநாளே திபாங்கருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பில்
அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும் தொடர் கண்காணிப்பில்தான் அவர் உள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணம் நடந்த மறுநாளே நடிகர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வங்கமொழி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











