பாலிவுட்டின் மூத்த நடிகர் பாரூக் ஷேக் மரணம்
மும்பை: பழம்பெரும் நடிகர் பாரூக் ஷேக் வெள்ளிக்கிழமை நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.
துபாய் சென்றிருந்த அவருக்கு அங்கே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல் மும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

1970-80களில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். புதிய இந்திய சினிமாவின் பரிணாமத்துக்கு வழிவகுத்தவர். பின்னர் தொலைக்காட்சி தொடர்கள், மேடைகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்தார்.
ஷத்ரஞ் கே கிலாடி, சாஸ்மெ பதூர், கிஸி ஸே நா கெஹ்னா, நூரி, க்ளப் 60 ஆகிய திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரங்களும் நடிப்பும் பெரிதும் புகழப்பட்டன.
சமீபத்தில் வெளியான யே ஜவானி ஹை திவானி படத்தில் ரன்பீர் கபூர் தந்தையாக நடித்திருந்தார்.
Comments


Click it and Unblock the Notifications