காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்!

By

மும்பை: பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியாவிலும், கொரோனா வைரஸ் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

 கவலை அளிக்கிறது

கவலை அளிக்கிறது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,867 ஆக உயர்வடைந்துள்ளது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருந்தாலும் இதன் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

 நடிகர் கிரண்குமார்

நடிகர் கிரண்குமார்

இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் கிரண் குமாருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார். இந்தியில் முஜே தோஸ்தி கரோகே, ஜூலி, தட்கன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த 14 ஆம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

அப்போது மருத்துவர்கள், சில சோதனைகளைக் கண்டிப்பாக மேற்கொள்ளுமாறு கூறினர். அதில் ஒன்று கொரோனா டெஸ்ட். இதையடுத்து அவர் அநக்ச் சோதனையை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

 அறிகுறி இல்லை

அறிகுறி இல்லை

இதுபற்றி நடிகர் கிரண் குமார் கூறும்போது, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவ மனை சென்றேன். கொரோனா சோதனை செய்ய சொன்னார்கள். செய்தேன். எனக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், எனக்கு காய்ச்சலோ, இருமலோ, மூச்சுவிட சிரமப்படும் அறிகுறியோ எதுவும் இல்லை. இருந்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.

 ஸ்கூல் நாட்கள்

ஸ்கூல் நாட்கள்

இப்போது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளேன். வீட்டின் மூன்றாவது மாடியில் தனியாக இருக்கிறேன். இரண்டாவது தளத்தில் என் குடும்பம் இருக்கிறது. எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். இது எனது போர்ட்டிங் ஸ்கூல் நாட்களை ஞாபகப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். நாளை (மே 25), அல்லது நாளை மறுநாள் (மே 26) இரண்டாவது பரிசோதனைக்கு அவர் மருத்துவமனை செல்ல இருக்கிறார்.

 பாடகி கனிகா கபூர்

பாடகி கனிகா கபூர்

சினிமாவில், முதன் முறையாக, கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் பாடகி கனிகா கபூர். பிறகு தயாரிப்பாளர் கரீன் மொரானி, அவர் மகள்கள் சோயா, ஷாஷா நடிகர் புரப் கோலி ஆகியோரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இப்போது அவர்கள் அதில் இருந்து குணமடைந்து விட்டனர். இப்போது கிரண் குமாருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X