பாலிவுட் நடிகர் நசீருதின் ஷாவிற்கு நிமோனியா... மருத்துவமனையில் அனுமதி
மும்பை : பாலிவுட்டின் பிரபல நடிகரும், டைரக்டருமான நசீருதின் ஷா நிமோனியா பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.
1980 களில் பல படங்களில் முக்கிய ரோல்களில் நடிக்க துவங்கியவர் நசீருதின் ஷா. பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். 2006 ல் தனது முதல் படமாக Yun Hota To Kya Hota என்ற படத்தை இயக்கினார். பிறகு டிவி சீரியல்கள் பலவற்றிலும் நடித்தார்.'

பல விருதுகளை வென்ற நடிகர்
தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தனது முதல் மனைவி மனாராவை விவாகரத்து செய்து விட்டு, தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த ரத்னா பதக்கை 1982 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நசீருதின் ஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

2 நாட்களாக யாருக்கும் தெரியல
கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடிகை மந்த்ரா பேடியின் கணவரும் இயக்குனருமான ராஜ் கவுசல் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்தே நசீருதின் பற்றிய தகவல் வெளி வந்துள்ளது.

நிமோனியா பாதிப்பு
இது பற்றி அவரின் மேனேஜரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவரது நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்கு ஒத்துழைப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.

பிரபலங்கள் வாழ்த்து
70 வயதாகும் நசீருதின் அடுத்தபடியாக Maarrich, The Miniaturist Of Junagadh ஆகிய படங்களில் நடிக்க ஒப்பநாதமாகி உள்ளார். நசீருதின் விரைவில் குணமடைய பாலிவுட் பிரபலங்கள் அனுபம் கெர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











