பழம்பெரும் நடிகர் சக்ரவர்த்தி மும்பையில் காலமானார்... 80 படங்களுக்கு மேல் நடித்தவர்!
மும்பை : தமிழ் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த சக்ரவர்த்தி இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழில் இவர் 80 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய 62வது வயதில் இன்று அவர் காலமானார்.

80களில் நடித்த சக்ரவர்த்தி
1970 மற்றும் 80களில் மிகவும் சிறப்பான நடிகராக இருந்தவர் நடிகர் சக்ரவர்த்தி. சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மும்பையில் வசித்துவந்த இவர், சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி கொடுக்கும் பணியில் செயல்பட்டு வந்தார்.

ரிஷிமூலம் படத்தில் நடித்தவர்
சிவாஜியுடன் ரிஷிமூலம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து குணச்சித்திர கேரக்டர்களில் பல முக்கியமான படங்களில் இவர் நடித்துள்ளார். ஹீரோக்களின் நண்பன் உள்ளிட்ட கேரக்டர்களில் இவரை பார்க்க முடிந்தது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக இவர் காணப்பட்டார்.

மும்பையில் காலமானார்
தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் சக்ரவர்த்திக்கு வாய்ப்புகள் குறைய சினிமாவில் இருந்து விலகி மும்பையில் செட்டில் ஆனார். இந்நிலையில் 62 வயதான சக்ரவர்த்தி இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

மாரடைப்பால் காலமானார்
காலையில் அவரது மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ராதிகாவுடன் இவர் நடித்த கண்மலர்களின் பாடல் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது

திரையுலக பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில் சக்ரவர்த்தியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இரு மகன்களில் ஒருவர் சிறப்பான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒருவர் படித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











