சனாதன சர்ச்சை.. கஸ்தூரி மத வெறியராக இருக்கலாம்.. சத்யராஜ் மகள் கடும் தாக்கு!
சென்னை: சனாதனத்திற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேசி உள்ளதற்கு நடிகர் சத்யராஜின் மகள் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த 2ந் தேதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா நோய்களை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.

உதயநிதி பேச்சு: உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், பரமஹன்ஸ் ஆச்சாரியா என்ற சாமியார், சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று எச்சரித்து, உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்திருந்தார்.

கஸ்தூரி ட்வீட்: இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே...அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க என உதயநிதியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மதவெறியராக இருக்கலாம்: அது மட்டுமில்லாமல், ஊடகம் ஒன்றுக்கு சனாதனத்திற்கு ஆதரவாக பேட்டி ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், கஸ்தூரி அவர்கள் சனாதனம் குறித்து அளித்த பேட்டியை பார்த்தேன், என் கருத்துப்படி அவரின் பேச்சு முழுமையாக ஒரு மத வெறியர் போல் தெரிகிறது. இந்த பிற்போக்கான செயல் பெண்களுக்கு இவர் செய்யும் துரோகம்.

தவறான பேச்சு: சனாதனத்தால் பெண் உரிமை பறிக்கப்படுகிறது. ஆகையால் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான இந்த சனாதனத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். கஸ்தூரி பேசிய பேச்சு முற்றிலும் தவறானது என்று சத்யராஜ் மகள் திவ்யா பேசியிருந்தார்.இவர் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். அரசு நிறுவனத்துடன் கைகோர்த்து சமூக சேவைகள் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











