twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாதாசாகிப் பால்கே விருது பெற்ற நடிகர் சசி கபூர் மறைவு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தாதாசாகிப் பால்கே விருது பெற்ற நடிகர் சசி கபூர் மறைவு!- வீடியோ

    மும்பை : பழம்பெரும் இந்தி நடிகர் சசி கபூர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். உடல்நலக் குறைவால் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

    பழம்பெரும் நடிகர் பிருத்விராஜ் கபூரின் இளைய மகன் சசி கபூர். இவர் பிரபல நடிகரும் இயகுநருமான ராஜ் கபூர் மற்றும்ச் ஷமி கபூர் ஆகியோரின் தம்பி ஆவார். பாலிவுட் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் சசி கபூர்.

    Veteran actor shashi kapoor passes awsy

    'தீவார்', 'சில்சிலா', 'சத்யம் சிவம் சுந்தரம்' உள்ளிட்ட 160 படங்களில் நடித்தவர் சசி கபூர். நடிகராக மட்டுமின்றி, ஆறு படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். 6 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் இரண்டு படங்களை இயக்கியும் இருக்கிறார்.

    நடிகை ஜெனிஃபர் கெண்டலை திருமணம் செய்து கொண்டார். இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்புக்காக சசி கபூர் கடந்த 2015-ம் ஆண்டு தாதாசாகிப் பால்கே விருது பெற்றார்.

    சசி கபூரின் மறைவுக்கு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பூ, சசி கபூர் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Legendary Actor Shashi kapoor passes away at 79. Shashi Kapoor starred in 160 films including 'Deewar' and 'Satyam Sivam Sundaram'. Shashi Kapoor is also producing six films. He has worked as assistant director in 6 films and has directed two films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X