twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !

    |

    சென்னை : மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா தொற்றால் காலமானார்.

    அவருக்கு வயது 78, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.

    முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து! முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து!

    இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபலமானார்

    பிரபலமானார்

    1981ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'கல்தூண்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் திலக், அந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்தூண் திலக் என்று பிரபலமாக அறியப்பட்டார்.

     பல படங்களில்

    பல படங்களில்

    டைகர் தாத்தாச்சாரி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ஆறிலிருந்து அறுபது வரை, பேர் சொல்லா ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை என சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் ஆர்.கே பகவதியின் மகனாக நடித்திருப்பார். பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

    பல தொடர்களில்

    பல தொடர்களில்

    சினிமாத்துறையில் 74 ஆண்டு அனுபவம் வாய்ந்த திலக், ஏவிஎம் ஸ்டூடியோவில் உதவி படத்தொகுப்பாளராக சிறிது காலம் பணியாற்றி உள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இன்று காலமானார்

    இன்று காலமானார்

    இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கல்தூண் திலக் இன்று காலமானார். அவருக்கு வயது 78 ஆகியது. மூத்த பழம் பெரும் நடிகர் திலக்கின் மறைவுக்கு திரையிலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவின் 2வது அலையில் சிக்கி திரையுலகைச் சேர்ந்த பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.

    Read more about: corona covid
    English summary
    Veteran actor Thilak passes away
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X