ஒரு நடிகரின் நிலையைப் பாருங்கள்.. மருத்துவ செலவுக்குப் பணம் கேட்டு கலெக்டரிடம் மனு!

By Sudha

கோவை: வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள நடிகர் வெள்ளை சுப்பையா மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி கோரி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் பிசியாக நடித்த காலத்திற்குப் பின்னர் வயதான காலத்தில் நலிந்து போய் கஷ்டப்படும் நிலை தொடர்கதையாகி வருகிறது.

எத்தனையோ நடிகர், நடிகையர் தங்களது வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவ சிகிச்சைக்குக் கூட பணம் இல்லாத நிலையில், பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத நிலையில் இருப்பதை திரையுலகமும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் உள்ளது.

அப்படிப்பட்ட நடிகர்கள் வரிசையில் பழம் பெரும் நடிகரான வெள்ளை சுப்பையா இணைந்துள்ளார்.

வைதேகி காத்திருந்தாள்

வைதேகி காத்திருந்தாள்

விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் உள்பட பல விஜயகாந்த் படங்களில் நடித்துள்ளார் வெள்ளை சுப்பையா.

ஏன் வெள்ளை சுப்பையா....

ஏன் வெள்ளை சுப்பையா....

அப்போது சுப்பையா என்ற பெயரில் நிறையப் பேர் இருந்தனர். எஸ்.வி. சுப்பையா இருந்தார். கறுப்பு நிறத்தில் இன்னொரு காமெடியன் சுப்பையா இருந்தார். எனவே நல்ல நிறத்துடன் இருந்த இவருக்கு வெள்ளை சுப்பையா என்று பெயர் வந்தது.

கரகாட்டக்கார கோஷ்டியில்

கரகாட்டக்கார கோஷ்டியில்

கவுண்டமணி காமெடியில் கலக்கிய கரகாட்டக்காரன் படத்தில் அந்த கரகாட்டக்கார கோஷ்டியில் இடம் பெற்ற ஒருவராகவம் சுப்பையா நடித்திருந்தார்.

74 வயதில் சிரமம்

74 வயதில் சிரமம்

தற்போது 74 வயதாகும் வெள்ளை சுப்பையா கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை கலெக்டரிடம் கொடுக்க காத்திருந்தார். பின்னர் தனது நிலை குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

மேட்டுப்பாளையம் காட்டூர்

மேட்டுப்பாளையம் காட்டூர்

சுப்பையா கூறுகையில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூர் பகுதிதான் எனது சொந்த ஊர். நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருக்கிறேன்.

சொந்த ஊரில் செட்டில்

சொந்த ஊரில் செட்டில்

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். இந்த நிலையில், எனது கழுத்தில் ஒரு கட்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தேன்.

புற்றுநோய்க் கட்டி

புற்றுநோய்க் கட்டி

அது புற்றுநோய்க் கட்டி என்பது தெரியவந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இந்த சிகிச்சைக்காக எனது கையில் இருந்த சொற்ப பணத்தையும் செலவழித்து விட்டேன். எனவே, தொடர் மருத்துவ சிகிச்சைக்கு அரசின் உதவியை நாடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என்றார் சுப்பையா.

நடிகர் சங்கம் ஏதாவது உதவி செய்யுமா...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X