twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘ரஜினிகாந்தா' படம் மூலம் பிரபலமான.. பழம்பெரும் நடிகை வித்யா சின்ஹா காலமானார்!

    பழம்பெரும் இந்தி நடிகை வித்யா சின்ஹா காலமானார்.

    |

    மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை வித்யா சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார்.

    தனது 18 வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் வித்யா சின்ஹா (71). ஆரம்பத்தில் மாடலாக இருந்தவர் பின்னர், நடிகையாக மாறினார். 1974-ல் வெளியான பாசு சாட்டர்ஜியின் 'ரஜினிகாந்தா' படம் அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது.

    Veteran actor Vidya Sinha passes away at 71

    இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், 1986-ல் ஜீவா என்ற இந்தி படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து நடிப்புக்கு ஓய்வு கொடுத்த வித்யா, மீண்டும் கடந்த 2011-ல் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'பாடி கார்டு' திரைப்படத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

    வயோதிகம் காரணமாக நீண்டகாலமாக உடல்நலப் பிரச்சினைகளால் வித்யா சிரமப்பட்டு வந்தார். அவருக்கு நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு இருந்தது. அதற்கான தொடர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஞாயிறன்று அவரது உடல்நிலை மோசமாகவே, உடனடியாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

    மறைந்த வித்யா சின்ஹாவுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். வித்யாவின் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

    English summary
    Veteran Bollywood actress Vidya Sinha, known for her role in Basu Chatterjee's film "Rajnigandha" (1974), here on Thursday passed away after a brief lung-cum-heart ailment, family sources said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X