கடந்த ஆண்டு கல்யாணம்.. இந்த வருஷம் செம ஹேப்பி.. குட் நியூஸ் சொன்ன விஜயகுமார் பேத்தி!
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. தற்போது லண்டனில் வசித்து வரும் தியா ஒரு சூப்பரான குட் நியூஸ் ஒன்றை சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர், சினிமாவில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜயகுமார்: நடிகர் விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவருடன் திருமணம் நடந்து, அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளை இருந்த போதும், நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர். இதில் ஒரே ஒரு ஆண்வாரிசு என்றால் அது அருண்விஜய் தான். அவரும், தற்போது சினிமாவில் டாப் நடிகராக இருக்கிறார். அனிதா, கவிதா இருவரும் மருத்துவராக இருக்கின்றனர்.

பேத்தி திருமணம்: இதில் விஜயகுமார் மகள்களில் ஒருவரான அனிதாவிற்கு, தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில், விஜயகுமாரின் பேத்தி தியா அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். கடந்த ஆண்டு, தியாவுக்கு தில்லா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று, பிப்ரவரி மாதம் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல நடிகர்கள் கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட போதும், இந்த குடும்பத்தில் ஒருவரான வனிதா கலந்து கொள்ளவில்லை.
குவியும் வாழ்த்து: தமிழ் நாட்டில் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற போதும், லண்டனில், தியாவின் ரிசப்ஷன் உச்சு கொட்டும் அளவிற்கு நடைபெற்றது. தற்போது லண்டனில் செட்டிலாகி இருக்கும் தியா புதிதாக வீடு வாங்கி கிரபிரவேஷம் செய்துள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











