பழம் பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்… திரைத்துறையினர் இரங்கல் !

சென்னை : பழம் பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று காலமானார்.

94 வயதான ஜெமினி ராஜேஸ்வரி குரோம்பேட்டையில் அவரது குடும்பத்தினருடன் வசிந்து வந்து வந்தார்.

இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

க்ரூப் நடனக்கலைஞராக

க்ரூப் நடனக்கலைஞராக

1948ம் ஆண்டு எஸ்.எஸ். வாசன் இயக்கத்தில் எம்.கே ராதா, என்.எஸ். கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சந்திரேலேகா, இந்த திரைப்படத்தில் க்ரூப் நடனக்கலைஞராக தனது 16 வயதில் ஜெமினி ராஜேஸ்வரி தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

400க்கும் மேற்பட்ட படங்களில்

400க்கும் மேற்பட்ட படங்களில்

கமலஹாசனின் 16 வயதினிலே திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும், நிறம் மாறாத பூக்கள், நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, விளையாட்டு கல்யாணம், பத்தாம் பசலி, உனக்காக நான், திருடன், காதல் படுத்தும் பாடு என கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வில்லியாக

வில்லியாக

பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சின்ன வீடு திரைப்படத்தில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெமினி ராஜேஸ்வரி. இந்த படத்தில் சின்னவீட்டுக்கு வரும் பாக்கியராஜை ஏமாற்றும் கதாபாத்திரத்தை அழகாக செய்து இருப்பார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

காலமானார்

காலமானார்

மேலும் சிவகார்த்திகேயன் நடத்த வேலைக்காரன், எதிர்நீச்சல் மற்றும் கயல் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 94, தட்சிணாமூர்த்தி, செல்வராஜ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெமினி ராஜேஸ்வரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: காலமானார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X