’எதிர்நீச்சல்’ நாயகி.. பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி.. கொரோனா பாதிப்பு இல்லையாம்
பெங்களூரு: நீர்க்குமிழி, எதிர்நீச்சல் என நடிகர் நாகேஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் மற்றும் கன்னட சூப்பர்ஸ்டார்களுடன் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கமலா குமாரி என்ற தனது இயற்பெயரை ஜெயந்தி என சினிமாவுக்காக மாற்றிக் கொண்டார்.
ஆஸ்த்மா மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தற்போது அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
75 வயதாகும் நடிகை ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளதாக அவரது மகன், கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் நடிகை ஜெயந்தியின் மகன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











