மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. பழம்பெரும் நடிகை ஜெயந்தி குணமடைந்து வருகிறார்.. மகன் தகவல்!

By

பெங்களூரு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயந்தி குணமடைந்து வருவதாக அவர் மகன் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை ஜெயந்தி. இவர் தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

1960-ல் வெளியான யானை பாகன் படத்தில் அறிமுகமான இவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தி

தெலுங்கு, இந்தி

தமிழில், இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், வீராதி வீரன், நீர்குமுழி, முகராசி, பாமா விஜயம், எதிர்நீச்சல், இருகோடுகள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், சிவாஜி, எம்.ஜி.ஆர், ராஜ்குமார் உட்பட பலருடன் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

தற்போது அவருக்கு 75 வயது ஆகிறது. பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயந்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலும் இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நடிகை ஜெயந்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் இன்னும் ஐசியூவில்தான் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாக அவர் மகன் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

அப்படியே வருவார்

அப்படியே வருவார்

அவர் உடல் நிலை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் உடல் நிலை நன்றாக இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டும் அவர் இதுபோன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். இப்போதும் அப்படியே வருவார் என்றும் கிருஷ்ண குமார் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் உடல்நிலை குறித்து வதந்தி கிளம்பியது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: jayanthi ஜெயந்தி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X