பெண் செயலாளருடன் உறவில் இருந்த பாலிவுட் நடிகை.. சுயசரிதை புத்தகத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

மும்பை: பாலிவுட் நடிகை ரேகா பெண் செயலாளருடன் நெருங்கிய உறவில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் காதல் மன்னன் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசனின் மகள் தான் பானு ரேகா. பாலிவுட் திரையுலகில் இவரை ரேகா என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

40 வருடத்திற்கு மேலாக பாலிவுட்டில் கலக்கி வரும் ரேகா, சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Veteran Actress Rekha Relationship With Her Secretary Farzana

நடிகை ரேகா: 80 மற்றும் 90 காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை ரேகா, ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று தனி இடத்தை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, ஜித்தேந்திரா, சத்ருகன் சின்ஹா, அக்ஷய் குமார், சஞ்சய் தத், கமல்ஹாசன் என பல நடிகர்களின் காதல் கிசுகிசுவில் இவரின் பெயர் அடிப்பட்டது.

கணவர் இறந்தார்: பல காதல் தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்து வந்த ரேகா, 1990ம் ஆண்டு டெல்லி தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவரின் திருமண வாழ்க்கை ஓராண்டுக்குள் முடிந்துவிட்டது. ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வால் திடீரென தற்கொலை செய்து கொண்டு இருந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி: இந்நிலையில், நடிகை ரேகாவின் சுயசரிதை புத்தகம் ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் யாசிர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரேகா குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை அவர் வெளிப்படையாக எழுதி உள்ளார்.

Veteran Actress Rekha Relationship With Her Secretary Farzana

பெண் செயலாளருடன் உறவு: அதில் நடிகை ரேகா தனது பெண் செயலாளரான பர்சானாவுடன் உறவில் இருந்தார். ரேகாவின் படுக்கையறைக்குள் நுழையக்கூடிய ஒரே நபர் பர்சானா தான் என்றும், அவர்கள் இருவரும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒன்றாக இருந்து வருகிறார்கள்.

ரேகா பர்சானா இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டார் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றும். மேலும், ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு இந்த லெஸ்பியன் உறவுதான் காரணம் என்று யாசர் உஸ்மான் அந்த புத்தகத்தில் எழுதி உள்ளார். இது பாலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X