லாரி மீது மோதிய கார்.. பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி
மும்பை: பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள காலாப்பூர் என்ற இடத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு இந்த சாலை விபத்து நேர்ந்துள்ளது.

நின்றிருந்த லாரி மீது ஷபானா ஆஸ்மி சென்ற கார் மோதியதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நடிகை ஷபானா ஆஸ்மி அருகில் இருந்த எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
69வயதாகும் ஷபானா ஆஸ்மி பாலிவுட்டின் கிளாசிக் படங்களான மஸூம், அமர் அக்பர் அந்தோனி, அன்கூர், நிஷாந்த், அர்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஷபானா ஆஸ்மியின் கணவர் ஜாவேத் அக்தருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதுமின்றி தப்பித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு நடந்த எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி லதா மங்கேஷ்கர் மனமுடைந்து அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











