இதுக்கு மேல முடியாது.. நடிகை துளசி எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பிடித்த நடிகை துளசி, சினிமாவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். பல தசாப்த காலமாக திரைத்துறையில் பிரபலமான 'அம்மா' கதாபாத்திரங்களின் அடையாளமாக திகழ்ந்த துளசி, தன்னுடைய பயணத்தை நிறுத்தப் போவதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை துளசி, தனது 3 வயதில், ஜீவனதரங்கலு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதன் பின் தமிழில் சகலகலா வல்லவன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த துளசி தொடர்ந்து, நல்லவனுக்கு நல்லவன், தூரத்துப் பச்சை,தாம்பத்யம் போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார். இதையடுத்து, கன்னட இயக்குநர் சிவமணியை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த து துளசி மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை துளசி: தமிழ், தெலுங்கு,கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த துளசி, குறிப்பாக தமிழ் சினிமாவில் உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். இவர், சுந்தரபாண்டியன், பண்ணையாரும் பத்மினியும், சர்க்கார், வெந்து தணிந்தது காடு, நான் ஈ, குருதி, இமைகா நொடிகள், ஆதலால் காதல் செய்வீர் போன்ற பல படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சினிமாவில் இருந்து விலகுகிறார்: இயக்குநர்களின் 'first choice' ஆக இருந்து வந்த துளசி, தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து விலகப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டிசம்பர் 31 அன்று எனது ஷீரடி பயணத்தை தொடங்குகிறது. இதனால், நான் மகிழ்ச்சியாக ஓய்வு பெற விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். நல்ல நடிகை சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை துளசி உண்மையில் முழுமையாக விலகுகிறாரா? அல்லது தற்காலிக இடைவெளியா? என்ற கேள்விக்கு ரசிகர்கள் பதிரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











