திரைத்துறையில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகை காலமானார்.. இன்று இறுதிச்சடங்கு!
சென்னை : பழம்பெரும் நடிகை வி வசந்தா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை : எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய வசந்தா. இரவும் பகலும் படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து அசோகனுக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிபடங்களிலும் நடித்துள்ளார்.

ரஜினியின் அம்மாவாக : 1981ம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த ராணுவ வீரன் படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும், கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
வி வசந்தா காலமானார் : வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வி வசந்தா, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்னர். நடிகை வி. வசந்தாவின் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.வருகின்றனர்.
சோகத்தில் திரையுலகம் : இந்தாண்டு தொடக்கத்தில் காமெடி நடிகர்கள் மயில்சாமி மகா சிவரத்திரி விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்தநிலையில் உயிரிழந்தார். மேலும், பிரபல இயக்குநர் டிபி கஜேந்திரன், பாடகி வாணி ஜெயராம் என நான்கு திரைப்பிரலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது மரணங்கள் ஏற்படுத்திய சோகத்தில் இருந்தே திரையுலகினர் மீளாத நிலையில், பழம்பெரும் நடிகை வி. வசந்தாவின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











