வாழ்க்கையில் நான் பண்ண பெரிய தப்பு கல்யாணம் தான்..கண்கலங்கிய வடிவுக்கரசி!

சென்னை : வாழ்க்கையில் நான் பண்ண பெரிய தப்பே கல்யாணம் பண்ணியது தான் என நடிகை வடிவுக்கரசி கண்ணீருடன் கூறியுள்ளார்.

இயல்பான முகம், கம்பீரமான குரல் அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்திய நடிகை என பெயர் எடுத்தவர் வடிவுக்கரசி

அம்மா,அக்கா, தங்கை, அத்தை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், மெருகேற்றும் நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.

veteran actress Vadivukkarasi spoke about her married life

வடிவுக்கரசி : 1978ம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தில் மார்டன் உடையில் அடாவடியாக பேசிக்கொண்டு இங்கிலீஸ்காரி போல சினிமாவில் அறிமுகமானார் வடிவுக்கரசி. அந்த திரைப்படத்தை அடுத்து கன்னிப் பருவத்திலேயே என்ற திரைப்படத்தில் ராஜேஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

450 படங்களில் : 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கிட்டத்தட்ட 450திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பல சோகமான சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

veteran actress Vadivukkarasi spoke about her married life

ஒரு நாளில் ரோட்டில் : அவர் அளித்துள்ள பேட்டியில், நான் 17 வயதாக இருக்கும் போது பெரிய செல்வந்தர் குடும்பமாக இருந்தது. ஒரே இரவில் ரோட்டுக்கு வருவார்கள் என்று சொல்வார்களே, அதேபோல என் குடும்பமும் ஒரு நாளில் ரோட்டுக்கு வந்துவிட்டது. எல்லாம் கையை விட்டுச் சென்று விட்டது. வேலைக்குப் போய்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால் தான் நடிக்கவே வந்தேன்.

என் அம்மாதான் எல்லாம் : என் வாழ்க்கையில் எனக்கு பக்கபலமாக இருந்தது என் அம்மா தான், அவர்கள் மட்டும் இல்லை என்றால் என்றால் இத்தனை ஆண்டுகள் உழைத்து இருக்க முடியாது. அவர்கள் என்னையும் என் மகளையும் நன்றாக வளர்த்தார். அம்மா இறந்த போது உடைந்துவிட்டேன், ஒரு பெண்ணுக்கு பக்கபலமே அம்மா தான்.

veteran actress Vadivukkarasi spoke about her married life

நான் செய்த தவறு : என் திருமண வாழ்க்கை சரியில்லாமல் போய்விட்டது, குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தபோது, பலரும் அந்த குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று என்னிடம் அறிவுரை கூறினார்கள். அப்படி மனதில் ஒருவர் மீது ஆசைவர, அவருக்காக ஜாமீன் கையெழுத்து எல்லாம் போட்டு கடைசியில் ஏமாந்து போனேன்.என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் தான் என்று வடிவுக்கரசி கண்ணீருடன் அந்த பேட்டியில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X