ரவி.கே.சந்திரனின் சகோதரர்... பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு காலமானார்

By

கோழிக்கோடு: பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு நேற்று காலமானார். அவருக்கு வயது 72.

பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு. செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த இவர், லயோலா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றார்.

அங்கு பிரபல இயக்குனர்களான பாலு மகேந்திரா, ஜான் ஆபிரகாம், கே.ஜி.ஜார்ஜ் ஆகியோர் இவரது வகுப்புத்தோழர்கள். ஜான் ஆபிரகாம் இயக்கிய புகழ்பெற்ற, அக்ரஹாரத்தில் கழுதை உட்பட அவரது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

மணிரத்னத்தின் பகல் நிலவு

மணிரத்னத்தின் பகல் நிலவு

ஏராளமான மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர், தமிழில், அலாவுதீனும் அற்புத விளக்கும், தேவதை, சாவித்ரி, மணிரத்னத்தின் பகல் நிலவு, பாடும் வானம்பாடி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

125 படங்கள்

125 படங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராமச்சந்திர பாபு.

புரொபஷர் தின்கன்

புரொபஷர் தின்கன்

முதன் முறையாக புரொபஷர் தின்கன் என்ற படத்தை இயக்கினார். திலீப் ஹீரோவாக நடித்தார். நடிகை கடத்தல் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த படம் நிறுத்தப்பட்டது.

லொகேஷன்

லொகேஷன்

புதிய படம் ஒன்றுக்காக, கோழிக்கோடு அருகே நேற்று லொகேஷன் பார்க்கச் சென்றிருந்தார் ராமச்சந்திர பாபு. அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரவி.கே.சந்திரனின் சகோதரர்

ரவி.கே.சந்திரனின் சகோதரர்

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்க இருக்கிறது. மறைந்த ராமச்சந்திர பாபு, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் சகோதரர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X