மாமன்னன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய வடிவேலு.. விரைவில் ரிலீஸ் !

சென்னை : உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிக்கும் மாமன்னன் படத்தின் டப்பிங் பணியை வடிவேலு தொடங்கி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாரின்,கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் வடிவேலு நடித்துள்ள படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால், படத்தின் கதை மோசமாக இருந்ததால், படம் தோல்வி அடைந்தது.

நாய்சேகர் ரிட்டன்ஸ்

நாய்சேகர் ரிட்டன்ஸ்

நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தைத் தொடர்ந்து வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி புத்தாண்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாமன்னன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாரி செல்வராஜூடன் வடிவேலு

மாரி செல்வராஜூடன் வடிவேலு

இந்நிலையில், நடிகர் வடிவேலு மாமன்னன் படத்துக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து டப்பிங் பேசும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. படம் பற்றி ஏதாவது தகவல் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த டப்பிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி வருகின்றன. இப்படத்தில் வடிவேலு உதயநிதியின் தந்தையாக நடித்துள்ளார்.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய இவர் அடுத்ததாக தனுஷுடன் கூட்டணி அமைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X