twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழம்பெரும் திரைப்பட இயக்குனர்,A.C.திருலோகச்சந்தர்...நினைவு தினம் இன்று

    |

    சென்னை :A.C.திருலோகச்சந்தர் இயக்கி நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்த 1969 ல் வெளியான "தெய்வமகன்" திரைப்படம் முதன்முதலாக தென்னிந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமாகும்.

    மக்கள் திலகம் அருகில் A.C.திருலோகச்சந்தர், மக்கள் திலகம் கையில் பிரபல திரைப்பட நடிகர் சூர்யா. அருகில் கலையுலக மார்க்கண்டயன் சிவகுமார் போன்றோர் இருக்கும் பொக்கிஷமான போட்டோ கிளிக்ஸ் நாம் பார்க்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி.

    முதல்வருக்கு நன்றி கூறிய ரவீந்தர் சந்திரசேகர்..பல கோரிக்கைகளும் இருக்கு..ஏன்னு தெரியுமா ? முதல்வருக்கு நன்றி கூறிய ரவீந்தர் சந்திரசேகர்..பல கோரிக்கைகளும் இருக்கு..ஏன்னு தெரியுமா ?

    A.C.திருலோகச்சந்தர் இயக்கி கதாநாயகனாக சி. எல். ஆனந்தன், கதாநாயகியாக சச்சு மற்றும் அசோகன் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படமான "வீரத் திருமகன்" ஸ்டில் என்றும் என்றென்றும் நினைவில் நிற்பவை .

    பல காலம் பேசப்படும்

    பல காலம் பேசப்படும்

    "எங்க மாமா " என்ற படத்தை இயக்குனர் A.C.திருலோகச்சந்தர் மிகவும் ரசித்து இயக்கினார் , இந்த படத்தில் உதவி இயக்குனர் S.P.முத்துராமன், (பின்னர் புகழ்பெற்ற இயக்குனரானார்) பிரபல திரைப்பட நடிகர் பாலாஜி, பிரபல திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்களின் கூட்டணியில் உருவான இந்த படைப்பு பல காலம் பேசப்படும் படம் ஆகும் .

    ரீவைன்ட் செய்து பார்க்க

    ரீவைன்ட் செய்து பார்க்க

    நடிகர்திலகம் மற்றும் கமலஹாசனுடன் A.C.திருலோகச்சந்தர் பல காலம் நெருங்கி பழகியவர் . பல இயக்குனர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்தவர் , அது மட்டுமின்றி இவரது படைப்புகள் காலம் கடந்தும் ரசிக்கும் படி இருப்பதால் இன்றைய இளைய சமுதாயம் கூட ரீவைன்ட் செய்து பார்க்க வேண்டிய படங்களில் இவரது படங்கள் நிச்சியம் உண்டு

    முக்கியமான படங்கள்

    முக்கியமான படங்கள்

    A.C.திருலோகச்சந்தர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மும்மொழிகளில் திரைப்படங்களை இயக்கினார். இவரது தமிழ் படங்களில் சில முக்கியமான படங்களை என்றால்

    வீரத்திருமகன் (1962 )
    நானும் ஒரு பெண் ( 1963 )
    காக்கும் கரங்கள் ( 1965 )
    ராமு ( 1966 )
    அன்பே வா ( 1966 )
    தங்கை ( 1967 )
    அதே கண்கள் ( 1967 )
    என் தம்பி (1968 )
    இரு மலர்கள் (1969 )
    அன்பளிப்பு ( 1969 )
    திருடன் ( 1969 )
    தெய்வமகன் ( 1969 )
    எங்கிருந்தோ வந்தாள் ( 1970 )
    எங்க மாமா ( 1970 )
    பாபு ( 1971 )
    தர்மம் எங்கே (1972 )
    அவள் (1972 )
    பாரத விலாஸ் ( 1973 )
    தீர்க்கசுமங்கலி ( 1974 )
    அவன்தான் மனிதன் ( 1975 )
    அன்பே ஆருயிரே ( 1975 )
    டாக்டர் சிவா ( 1975 )
    பத்ரகாளி ( 1976 )
    பெண் ஜென்மம் ( 1977 )
    என்னைப்போல் ஒருவன் ( 1978 )
    வணக்கத்திற்குரிய காதலியே (1978)
    பைலட் பிரேம்நாத் ( 1978 )
    விஸ்வரூபம் ( 1980 )
    லாரி டிரைவர் ராஜாகண்ணு ( 1981 )
    வசந்தத்தில் ஓர் நாள் ( 1982 )
    அன்புள்ள அப்பா ( 1987 ) போன்ற படங்கள் ஆகும்

    காட்சி அமைப்புகள் பற்றி

    காட்சி அமைப்புகள் பற்றி

    இந்த work from home காலகட்டத்தில் பல இளைஞர்கள் பழைய படங்களை தேர்ந்து எடுத்து தங்களுக்கு கிடைத்த ஃப்ரீ டைமில் தொடந்து பார்த்து வருகின்றனர் . அந்த வரிசையில் கண்டிப்பாக ரீவைன்ட் செய்து பார்க்க A.C.திருலோகச்சந்தர் இயக்கிய பல படங்கள் சுவாரஸ்யம் மிகுதியாக இருக்கிறது என்று இணையதளங்களில் பல ரத பட்ட கருத்துக்கள் பல காட்சி அமைப்புகள் பற்றிய விவாதங்கள் என்று நடந்து வருகிறது . இப்படி ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது பொக்கிஷமே .

    Read more about: ஏசி
    English summary
    Veteran director AC Thirulogachandar was a very famous director for his movies like Veera Thirumagan, Nanum oru pen and many more. Today is his death anniversary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X