வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது

நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து "இளைய தலைமுறை"மற்றும் அக்கரை பச்சை,வடைமாலை,ஆகிய படங்களை தயாரித்த பட அதிபர் ஜி.கே.தர்மராஜன் நேற்று மூச்சுச் தினறல் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77 அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. சிவாஜி நடித்த இளைய தலைமுறை, அக்கரை பச்சை, வடைமாலை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தர்மராஜன். நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வந்த அவர். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி இருந்தார். நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு சாவித்ரி என்ற மனைவி உள்ளார். இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

Veteran film producer G.K.Dharmarajan passed away

தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர். கவிஞர் வாலியையும் பிரபல ஒளிப்பதிவாளர் மாருதிராவையும் இணைத்து " வடைமாலை " என்ற படத்தின் மூலம் "மாருதி -வாலி " என்று இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியவர்.

எமர்ஜென்சி காலத்தில் வந்த படம் தான் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த "இளைய தலைமுறை " என்ற படம், "இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை" என்று எம்.எஸ். விசுவநாதன் கணீரென்று பாடிய படம் தான் "அக்கரை பச்சை.

எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். இதற்காக அவருடன் ஒப்பந்தமும் செய்தார். இளையராஜாவை இனசயமைப்பாளராகவும், கவிஞர் வாலி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுத மாருதி ராவ் ஒளிப்பதிவை கவனிக்க கே.சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக படத்துவக்க விழாவை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்தினார்.

நாஞ்சில் மனோகரன் தலைமை தாங்கினார். முதல்வரான எம்.ஜி.ஆரும் துவக்க விழாவில் கலந்து கொண்டார். பாடல் பதிவும் நடந்து முடிந்தது. ஆனால் அந்த படம் நின்று விட்டது. அந்த விரக்தியில் சினிமாவை விட்டு விலகினார் ஜி.கே.தர்மராஜன். இந்த நிலையில் உடல் நலம் குன்றியிருந்த தர்மராஜன் 77 வயதில் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X