சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்த.. பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

By

பெங்களூரு: பிரபல கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

சினிமா துறைக்கு கடந்த சில மாதங்கள், மோசமானதாக இருக்கிறது. மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் தொடர்ந்து மரணத்தைத் தழுவி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் மரணமடைந்த மறுநாளே, பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார். இது பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சில சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோகம் மறைவதற்குள் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

இவரது திடீர் மரணம், தென்னிந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அவரும் சிரஞ்சீவி சார்ஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இதையடுத்து பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்தது.

காமெடி நடிகர் ராஜகோபால்

காமெடி நடிகர் ராஜகோபால்

அவர் தற்கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்து மலையாள நடிகர் சச்சி திடீரென மரணமடைந்தார். இந்நிலையில், பிரபல கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். மிமிக்ரி ராஜகோபால் என்று அழைக்கப்படும் இவர், கன்னடம், தமிழ் உட்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்தவர். பெங்களூரில் வசித்து வந்த இவர், சிறுநீரகம் மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல்நிலை கடந்த புதன்கிழமை இரவு திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 69. இதையடுத்து கன்னட சினிமா துறையினர் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ராஜகோபாலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X