பழம்பெரும் மலையாள நடிகர் பி.சி.சோமன் காலமானார்
கொச்சி : பழம்பெரும் மலையாள நடிகர் பி.சி.சோமன், வயது மூப்பின் காரணமாக இன்று காலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 81. இவர் பல படங்களிலும், டிவி சீரியல் பலவற்றிலும் நடித்துள்ளார்.
சோமன், 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவற்றில் பல படங்கள் சூப்பர்ஹிட் படங்கள் ஆகும். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக ஸ்வயம்வரம், விதியன், மதிழுகள் உள்ளிட்ட படங்களுக்காக விருதுகளை பெற்றுள்ளார்.

கவுரவர், துருவம், ஃபயர்மேன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, சோமனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. திருவாங்கூர் டைடானியம் புரோடெக்ட்ஸ் நிறுவனத்திலும் இவர் பணியாற்றி உள்ளார்.
புகழ்பெற்ற டைரக்டர் அதூர் கோபாலகிருஷ்ணன் படங்களின் மூலம் மிகுந்த பாராட்டை பெற்றவர் சோமன். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











