உயிரை குடித்த புற்றுநோய்.. பழம் பெரும் நடிகை உயிரிழந்தார்.. பிரபலங்கள் இரங்கல்!
கொச்சி: பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடக கலைஞரான கவியூர் பொன்னம்மா 1960 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவர் திரையில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து சித்தி, அம்மா மற்றும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் கேரளா அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதை நான்கு முறை வென்றுள்ளார். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழில் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் அமலாவின் சேச்சியா நடித்திருந்தார். இவர் படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மருத்துவமனையில்: நடிகை கவியூர் பொன்னம்மா, கணவர் இறந்துவிட்டதால், கொச்சியின் புறநகர் பகுதியில் உள்ள கருமால்லூரில் தனது தம்பியுடன் வசித்து வந்த நிலையில், மே மாதம் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிப்பட்டது. புற்றுநோய் நான்காவது நிலைக்கு வந்துவிட்டதால்,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து இன்று அவர் உயிரி பிரிந்தது.
இன்று உயிர் பிரிந்தது: இவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பலரும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், அறுபது ஆண்டுகால வாழ்க்கையில் பாசமுள்ள தாயாக அவரது முக்கிய பாத்திரங்களும் அவரது புன்னகையும் பார்வையாளர்களை கவர்ந்தார். சத்யன், பிரேம் நசீர் போன்ற மூத்த நடிகர்களுக்கு அவர் தாயாகவும் நடித்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார்
நாளை இறுதிச்சடங்கு: அவரது உடல் பொதுமக்கள் மட்டும் திரைப்பிரபலங்களில் அஞ்சலிக்காக களமசேரி முனிசிபல் டவுன்ஹாலில் வைக்கப்படும். ஆலுவாவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்றும் பின் அவரது வீட்டில் தகனம் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











